
புலம்பெயர் வாழ்வியலில் கலியாணம், தலைப்பிரசவம் என்பதெல்லாம் மிக மிகப் பெரிய ஒத்திகைகளுடன் நிகழ்த்தப்படும் மாபெரும் நிகழ்வாக உருமாறிக் கொண்டே இருக்கின்றன. கோடம்பாக்கம் சினிமாக்களில் மிகையாக்கி காட்டப்படும் பிரசவக் காட்சிகளைப் பார்த்து மிரண்டு அரண்டு, அதுவும் மொழியறிவு போதாத அல்லது வேலை மொழி மட்டுமே நாவரப்பெற்ற அந்நியச்சூழலில் வைத்தியர்களுடன் சைகை மொழிகளுடனும், கடகப்பொதிகளான ஊகங்களுடனும் பலரும் பெற்றேர்களாகியது சுவையான பல கதைகளாகக் கூடும்.

இலண்டனில் உள்ள தமிழ் தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றுக்கு கார்ட் விற்பனையில் சில இளைஞர்கள ஈடுபட்டிருந்தனர். தமிழ்க் கடை ஒன்றில் வைத்து ஒரு தமிழ்க் குடும்பத்துக்கு தமது தொலைக்காட்சி பற்றி விளக்கம் அளிக்க முயன்றனர். அது பல உறுப்பினர்கள் கொண்ட பெரிய குடும்பமாக இருந்தது. அக்குடும்பத்தின் தலைவியை இளைஞர்கள் அணுகி தமது தொலைக்காட்சியைப் பற்றி விளக்கினர். “எங்கள் தொலைக்காட்சி ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒன்று. நாங்கள் இன்ன, இன்ன நிகழ்ச்சிகளை எல்லாம் ஒளிபரப்புச் செய்கிறோம்” என்று ஆரம்பித்தனர்.

நான் வேலைக்கு பயணிக்கும் இரயிலில் அடிக்கடி அவரைச் சந்திப்பதுண்டு. ஆனால் ஒருநாளும் பேச வாய்ப்புக் கிடைத்தில்லை. ஏனெனில் அவரை எப்போதும் தூங்கி விழும் நிலையில்தான் நான் காண்பதுண்டு. வாயைப் பிளந்தபடி அருகில் இருப்பவரின் தோளில் தூங்கிச் சரிவதும் அவர்கள் இவரை முறைத்துப் பார்ப்பதும் தள்ளி இருப்பதும் அடிக்கடி நிகழ்வதுண்டு. அன்றும் இப்படியான காட்சிதான். நான் வாசித்துக்கொண்டிருந்தேன். இரயில் திடீரென பெரிய சத்தத்துடன் குலுங்கி நின்றது.

காலை எழுந்து இணைய வெளியில் உலாவியபோதே உற்சாக மனநிலை தோன்றிவிட்டது. வேலைத்தலமான “இன்ரநெற்கபேக்கு” (Internet Cafe) வரும்போது கொஞ்சம் தெம்போடு கலந்த துள்ளல் நடை இருக்கவே செய்தது. தமிழகமக்களின் வாக்களிப்பும், தமிழகக்கட்சிகளின் இறுக்கமான போக்கும் தந்திருந்த ஆச்சரியங்களுக்கு அப்பால், சற்றும் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருந்தது அப்துல் கலாமின் நாடாளுமன்ற உரையும், செயற்திட்ட அறிக்கையும். வீறார்ந்த ஈழப்போராட்டம் புறநிலையில் புலப்படுத்தும் அதிர்வுகளின் சமிக்ஞை என்கிறது உள்மனம்!

புலம் பெயர்ந்த பின்னும், புலப்பெயர்வுக்கு புறப்பட்ட காலத்திலிருந்தும் எம்மவர்களுக்கு தொலைபேசி ஒரு அவசியக் கருவியாகிவிட்டது. எம்வர்களின் பல்வேறு பணிகளுக்கான முக்கிய தொடர்பாடல்கள் அதனூடாகவே நிகழ்த்தப்படுகிறன.இதன் வழியான உரையாடல்கள் சொல்லும் கதைகள் எத்தனை எத்தனையோ, இதிலொன்று… புதிய புதிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வருகையால் மலிவான தொலைபேசி இணைப்புகளும், இலவச உரையாடல் நேரங்களும் நீண்டு சென்றுகொண்டிருக்கின்றன. இவ்வேளையில் ஒருநாள், பக்கத்து அறையிலிருந்து நாரந்தனையிலுள்ள தன் தாயாருடன் தொடர்பை ஏற்படுத்துகிறாள் என் மனைவி.