ஊர் சிரிக்குமே

அந்த இளைஞர்கள் இருவருக்கும் ஒரே வயதிருக்கலாம். இரயிலில் பயணித்தபடி பெரிய சத்தத்துடன் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அன்றைக்குத்தான் சந்திக்கிறார்கள் போல் தெரிகின்றது. ஊர் உறவு விசாரணைகள் என்று ஆளுக்காள் மாறி பரிமாறிக் கொள்கிறார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய பேச்சு திரும்பியது. இருவரின் குரலிலும் கவலை தொனித்தது.எனக்கு முதல் விசாரணையில அகதியாக ஏற்க ஏலாது என்று பதில் அனுப்பியிற்றாங்கள். இப்ப மேல கொமிசனுக்கு விண்ணப்பத்தை அனுப்பியிருக்கிறன்.


