கடற்புவி அதிர்வும் மானுடரும்

சுனாமி (Tsunami) – தமிழர் தாயகத்திலிருந்து ஒலித்த அலறல்களையும் அள்ளிச்சென்றிருந்தது வங்காளக்கடலின் பேரலைகள் என்பது இந்நூற்றாண்டின் மிகப்பெரிய சோகம். இச்செய்தி எட்டிய கணத்திலிருந்து நாமெல்லாம் நடைப்பிணங்களாக புகலிடத்தின் இயந்திரச்சுற்றில். ஐபிசியும் தொலைபேசிகளுமாக தகவல்கள் சேரச்சேர ‘மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதைதான்!’. மிகப் பெரிய அவலத்தை தாங்கும் மன இறுக்கத்துடன் பணிக்கு சென்று வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.


