வாங்கல் – கொடுக்கல் – தவணை செலுத்தல்

சென்ற கோடைவிடுமுறை இலண்டன் மாநகர வலமாக அமைந்தது. நீண்ட இடைவெளியின் பின்னான சந்திப்புகளும் உறவாடல்களும் சுற்றுலாக்களுமாக நாட்கள் கழிந்தன. இலண்டன் மாநகருக்குள் வாகனத்தில் செல்வது இரவில் மட்டும் சாத்தியமாகவுள்ளதை பல நட்புகள் தெரிவிதிருந்தமை என்னை ஆச்சரியமூட்டியது. வீதி ஒழுங்குக் கெடுபிடிகளும், கமெராக்களும் நம்மவருக்கு நிறையவே பட்டறிவைக் கொடுத்திருந்தன.இதில் கணிசமான தாக்கத்தைக் கொடுத்தது தானியங்கிக் கமெராக்களின் ஆளுகைதான்.


