
வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அம்மாவை அக்கராயனில் நான் தேடிக்கொண்டிருந்தேன் ஷெல்களுக்குள் அம்மா ஐயனார் கோயிலை விழுந்து கும்பிட்டாள் ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது. நேற்று நடந்த கடும் சண்டையில் சிதைந்த கிராமத்தில் கிடந்தன படைகளின் உடல்கள் கைப்பற்றப்பட்ட படைகளின் உடல்களை கணக்கிட்டு பார்த்தபடி சிதைந்த உடல்கள் கிடக்கும் மைதானத்தில் பதுங்குகுழியிலிருந்து வெளியில் வந்த சனங்கள் நிறைகின்றனர். பக்கத்து வீட்டில் போராளியின் மரணத்தில் எழுகிற அழுகையுடன் இன்றைக்கு நாலாவது தடவையாக திடுக்கிட்டு எழும்பிய அம்மா
September 17, 2008 | பிரிவுகள்:
கவிதை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

இப்படியாக இருந்து வரும் நாளொன்றில் இங்கோர் ஈரவலயக் காட்டினில் புயலடித்து ஓய்ந்திருந்தது. தூறல் மழையும் ஈரலித்த காற்றும் ஓயாதிருந்தது. வேனிற் காலமும் தள்ளிப் போயிற்று. குழந்தைகளோ புயல் துழாவிச் சென்ற காட்டினைக் காணவும் அக்காட்டிடை உலவவும் ஆவல் கொண்டிருந்தனர். அவர்தம் ஆவல் மேலிட வீட்டின் மூலை முடுக்கிலும் புத்தக அடுக்கிலும் நாற்புற சுவரிலும் தொங்கத் தொடங்கின காடுகள். காடென்றால் பெரு விருட்சங்களும் நெடு மரங்களும் பற்றைகளும் செடி கொடிகளுமாய் அடர்ந்து கிடக்கும் காடுகளவை.
September 16, 2008 | பிரிவுகள்:
கவிதை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

நான் பொதுவாக காலை எழுந்ததும் சிறிது நேரம் வாசிப்பது வழக்கம். அது தெரிவுகளற்ற வாசிப்பு. அன்றும் அப்படித்தான் ஏதாவது வாசிப்போமே என்று நினைத்த நான் எனது புத்தக அலுமாரியில் சிறிது பார்வையை செலுத்தினேன். இப்பொழுதெல்லாம் என்னால் புத்தக அலுமாரிக்கு அருகில் சுதந்திரமாகச் செல்ல முடிவதில்லை. முன் எச்சரிக்கையுடன்தான் செல்ல வேண்டியிருக்கிறது. எனக்கு சிறிது ஆஸ்துமா பிரச்சனை இருப்பதால், தூசு மூக்கில் பட்டால் போதும் அன்று முழுவதும் தும்மல் என்னை ஒரு கை பார்த்துவிடும்.
September 16, 2008 | பிரிவுகள்:
கட்டுரை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

ஒரு சொட்டுப் பூலோகம் தன்காலடியிற் கிடக்க வானத்தை அண்ணாந்து பார்த்தான் மாணங்கி. படர்ந்துகிடந்த மேகங்களைக்கிழித்துக்கொண்டு எந்தப்பேரொளியும் பூலோகத்தைத் தொடுவதாய் தெரியவில்லையே என முணுமுணுத்தான். ‘நொருங்குண்ட இந்த இரவுகளைக் கடக்க நீர் தந்த குப்பிவிளக்குகள் போதவில்லையே என் பரமபிதாவே” என்று அவன் கண்ணீர் வடித்தான். உளைவுமிக்க இரவுகளை அவன் கடக்கமுடியாமற் போனாலும் இரவுகள் அவனைக் கடந்துபோயின. ‘எண்ணெய்ப்பீப்பாய்களை உருட்டிக்கொண்டு பகல் ஒரு வேட்டைநாயைப்போல வருகிறது எழுந்திரு மாணங்கி, எழுந்திரு” என்று உலுப்பியெழுப்பினான் கிழவன்.
September 15, 2008 | பிரிவுகள்:
கதை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »