
செய்ன் நதிக்கரை தமிழிலக்கிய வட்டம் நடத்திய மாயினி நாவல் அறிமுகமும் விமர்சனமும் நவம்பர் மாசம் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறப்புற நடந்தேறியது. திரு.மாணி.நாகேஸ் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் இலக்கியம், வரலாறு, தத்துவம் ஆகிய முக்கோணப் பார்வையை முறையே தா.பாலகணேசன், கி.பி.அரவிந்தன், க.வாசுதேவன் ஆகியோர் முன்வைத்தனர். இந்நிகழ்வுக்கு அவுஸ்ரேலியாவில் தற்போது தங்கியிருக்கும் மாயினி நாவலின் படைப்பாளர் எஸ்பொ ஒலிப்பதிவில் வழங்கிய வாழ்த்துச் செய்தி முழுமையாக இங்கே இடம்பெறுகின்றது.
November 23, 2008 | பிரிவுகள்:
நூல்நயம் |
மேலும் வாசிக்க »

1950-லேயே புகழ்பெற்ற நியூயார்க் ஹெரால்ட் டிரிபியூனின் சர்வதேச விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் இவராகத்தான் இருக்கும். உப்பள மக்களின் வாழ்க்கையின் அடிப்படையில் இவர் எழுதிய வேருக்கு நீர்தான் இவருக்கு சாஹித்ய அகாதமி விருதைப் பெற்றுத் தந்தது. இவரது மண்ணகத்துப் பூந்துளிகளையும், குறிஞ்சித் தேனையும், கரிப்பு மணிகளையும் தமிழறிந்த எந்த வாசகரும் மறந்திருக்க முடியாது. இந்தளவு புகழின் உச்சியிலிருந்த ஒரு மிகப் பிரபல எழுத்தாளருக்கு ஏனிந்த பாதுகாப்பற்ற நிலை?
November 19, 2008 | பிரிவுகள்:
கட்டுரை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

கருணாநிதிக்கும் அது நிகழ்ந்திருக்கிறது. நான் நினைத்துப் பார்ப்பதுண்டு ஒரு வேளை கருணாநிதி இருபது வருடங்களுக்கு முன்னர் இறந்திருந்தால் ஒரு சிறந்த தமிழ் தலைவராக அவரை வரலாறு பதிவு செய்திருக்கும். ஆனால் இனி எஞ்சியிருக்கும் காலத்தில் இழந்ததை எல்லாம் அவரால் இட்டுநிரப்ப முடியுமானால் அது ஆச்சரியமானதே!
November 12, 2008 | பிரிவுகள்:
கட்டுரை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

போரே தீர்வென்று கோடுகளின் கீழாய் எழுதிச் செல்கிறேன் எல்லாம் மாறி உடைத்த பொழுதும் போர்க்களங்களின் முகங்கள் மாறவில்லை யுத்தம் உன்னையும் என்னையும் தின்பதற்காய் காத்திருக்கிறது காலம் நம்மிடம் துப்பாக்கியை வழங்கிவிட்டு மௌனமாக கிடக்கிறது. கருத்தப்பூனையைப்போல கருணாநிதி மேடையிலிருந்து இறங்கிச் செல்கிறார் நேற்றிலிருந்து கருணாநிதி கவிதைகளிலிருந்து பூனைகள் வெளியேறுகின்றன வாய் கட்டப்பட்டவர்களின் பேரணிகளிலும் பூனையின் கறுத்த மௌனம் ஊடுருவுகிறது.
November 12, 2008 | பிரிவுகள்:
கவிதை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

எழுத்தின் துயரம் என்னவென்றால் ஒரு காலத்தில் நாம் பெரிதாக எண்ணியவர்களை நாமே ஒன்று மில்லை என்று உணர்ந்து நிராகரிக்க நேர்வதுதான். முன்னர் ஒரு காலத்தில் நான் தேடித் தேடி வாசித்த ஜெயகாந்தன் இந்துத்துவ பார்ப்பனிய சக்திகளின் காலைப்பிடித்துக் கொண்டிருந்த போது, சகித்துக் கொள்ள முடியாமல் ஒரு கட்டுரையை எழுத நேர்ந்தது. ஜெயகாந்தன் மீது எனக்கென்ன கோபம்?
November 12, 2008 | பிரிவுகள்:
கட்டுரை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

இராணுவப் பீரங்கிகளுக்குள் அப்பாவிகள் நிறைக்கப்பட்டிருக்கின்றனர் குருதிச்சுனையில் புதைந்த கவசவண்டிகள் அப்பாவிகளின் பிணங்களின் மேல் நகர்த்தப்படுகின்றன துப்பாக்கிகளின் ஒவ்வொரு தோட்டாக்களிலும் மனித உயிர்கள் குடியிருந்தன நாளைய பகல்கள் இன்றைய இரவுகளைக் கொடுத்து வேண்டப்பட்டுக் கொண்டிருந்தன நாளைய தீபாவளிக்குபட்டாசு வெடிக்கும் கனவுடன் தூங்கிய பிஞ்சுகளை எறிகணைகள் பட்டாசுகளாய் பிய்த்துப் போகிறன.
November 11, 2008 | பிரிவுகள்:
கவிதை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

ஒரு பத்திரிகையாளன் சிறப்பாகச் செயல்படச் சில யுக்திகள் உண்டு. இந்த யுக்திகளை வாசகர்களும் அறிந்துகொள்வது நலம். களத்திலிருந்து வரும் செய்திகளுக்கு வலுசேர்க்க, பத்திரிகையாளன் வரலாறு மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளிலிருந்து பல சான்றுகளையும் புரிதல்களையும் மேற்கோள்களாகக் காட்டி, நிழ்வுகளின் அரசியல், சமுதாய மற்றும் பொருளாதாரப் பின்னணியை வாசகனுக்குத் தர முயலுகிறான். கடந்த இரண்டு வாரங்களாக நான் பாகிஸ்தானில் பயணம் செய்ய வேண்டிய அலுவல்.
November 6, 2008 | பிரிவுகள்:
கட்டுரை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »