
கவிஞர் சு.வில்வரெத்தினம் மறைந்து இரு ஆண்டுகள் ஆகின்றன. இந்த இரண்டு வருடங்களில் ஈழ அரசியலில் பல மாற்றங்களும் அதனால் ஏற்பட்ட திடீர் நெருக்கடிகளும், ஒருவகையான சோகமும் பெருமளவிற்கு இலக்கியம் சார்ந்த உரையாடல்களை குறைத்திருக்கிறது. யுத்தம் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை தன்வசப்படுத்தியிருக்கும் எந்தவொரு இடத்திலும் நேரக் கூடிய ஒன்றுதான் இது. இராணுவ வெற்றிகளே எமக்கான நற்செய்தியாக இருக்கும் சூழல். எவர் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் சமகாலத்தின் உண்மை.

அது முதலில் ஒரு பன்றிகள் வளர்க்கும் இடமாகத்தான் இருந்தது. பெரிய பண்ணையென்றில்லா விட்டாலும் பன்றிகளை வளர்த்துப் பாராமரித்து, இறைச்சிக்காய் வெட்டிப் பதனிடுகின்ற ஒரு சுமாரான தொழிற்சாலை. அதில் 15 பேர் வரை வேலை செய்தார்கள். அந்தத் தெரு வீதியெங்கணும் பன்றிகளின் இரத்தவெடிலும், சேற்று நாற்றமும் மூக்கைத் துளைத்துப் படாத பாடு படுத்தும்.
December 27, 2008 | பிரிவுகள்:
கதை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

கவிஞர் சு.வில்வரத்தினம் மறைந்து இரண்டாண்டுகள் பூர்த்தியாகிய நிலையில் அவரை நினைவு கூரும் வகையில், அவரது மறைவு தினமான 09-12-2008 அன்று திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. திருகோணமலை கலை இலக்கிய நண்பர்களும், ‘நீங்களும் எழுதலாம்’ சஞ்சிகையும் இணைந்து நடாத்திய இந் நிகழ்வானது எழுத்தாளர் நந்தினிசேவியர் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி. செ.யோகராசா ‘சு.வியின் கவிதைகளில் பாடு பொருள்’ என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
நந்தினி சேவியர் தனது தலைமையுரையில், கவிஞர்.சு.விக்கும் தனக்கும் உள்ள [...]
December 20, 2008 | பிரிவுகள்:
கட்டுரை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

”இந்த பூமி எங்களின் தாய். நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம். அது எங்களில் ஒரு அங்கம். வாச மலர்கள் எங்கள் சகோதரிகள். மானும் குதிரையும், ராஜாளிப் பறவையும் எங்கள் சகோதரர்கள். பாறை, மலைமுகடுகள், புல்வெளிகளில் படிந்திருக்கும் பனித்துளிகள், மனிதன் எல்லாமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. ஓடைகளிலும் ஆறுகளிலும் பளபளத்து ஓடும் நீர் வெறும் நீரல்ல. அது எங்கள் மூதாதையரின் ரத்தம். அது வெள்ளையனுக்குப் புரிவதில்லை”
December 12, 2008 | பிரிவுகள்:
கட்டுரை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

இப்போதெல்லாம் உங்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் கொஞ்சம் அதிகம்தான். எந்தன் நினைவரங்கில் நிழல்களாய் உறைந்து கிடந்த உங்களில் பலரின் முகங்களெல்லாம் ஒளிபெற்றிருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதேவேளையில் உங்கள் உரையாடல்களில் நம்பிகைத் தொனி இழையோடி இருந்ததையும் நான் கவனித்தேன். அதனை விடவும் உங்கள் குழந்தைகள் வாஞ்சையுடன் என்னை உறவு சொல்லி அழைத்து விளக்கம் கேட்பதையும், என்னுடன் நட்பு கொள்ள விரும்புவதையும், நான் அங்கிருந்த அப்போதைய காலத்தில் தாங்களும் என்னுடன் நட்புகொள்ளும் வயதினராக இல்லையே என ஏக்கம் தெரிவித்தையும் நம் தோழமைப் பணிகளுக்கு கிடைத்த மரியாதையாகவே கருதுகின்றேன்.
December 6, 2008 | பிரிவுகள்:
கட்டுரை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

போர் மற்றும் அதன் அதிகாரத்திடம் காலம் தொடர்ந்து நசிபடுகிறது. தப்ப முடியாமல் சனங்களை வதைக்கிறது. எதிர்பார்ப்புக்களை தின்று அவலங்களை புதுப்பிக்கிற அதன் கோரப் பசியால் வாழ்வு பற்றிய ஆசை யாருக்குமில்லை.“நாட்டு நிலமையை யோசித்தால் அது வேறு கவலை நீங்கள் எல்லாம் வந்து போகக்கூடிய நிலமை எப்போ வரும் என்ற ஏக்கம்” இந்த தீராத பசியிடம் நல்ல பதில்கள் வரமாட்டாது. வர முடியாது என்ற நம்பிக்கையற்ற தன்மை வெளிப்படுகிறது. எல்லாருமே போய்க்கொண்டிருக்க யாரால் திரும்பிவர முடியும். அல்லது திரும்பி வருவது பற்றி யோசிக்க முடியும். மண்ணைப் பிரிந்த மாதுமையின் வலி அம்மாவின் கடிதத்தில் முழுவதும் வதைபடுகிறது.
December 4, 2008 | பிரிவுகள்:
கட்டுரை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »