
தொலைந்து போனவனின் அறிவிப்பு
என் கண்களில் சுடரும் மெழுகுவர்த்திகளை
நீ ஊதி அணைக்கலாம்
எனது உதடுகளில் ஜீவிக்கும் முத்தங்களை
உறைந்து போகச் செய்யலாம்
என் சொந்த பூமியின் காற்றை
சாபங்களால் நிறைக்கலாம்
தீனக்குரலை மடியச் செய்யலாம்
எனது நாணயங்களை
செல்லாததாக்கலாம்
என் குழந்தைகளின் முகங்களில்
புன்னகையை வேரோடு பிடுங்கி
எறியலாம்
ஆயிரம் சுவர்களை எழுப்பலாம்
கண்களில் ஊசி இறக்கி
வேதனையில் துடிக்க வைக்கலாம்
மனித எதிரியே
சமாதானம் இல்லை ஒரு போதும்
இறுதிவரை நான் போராடுவேன்.
எம் கோட்டைகளில் கொடி உயர்ந்து விட்டது
காற்றில் சமிக்ஞைகள் அசைகின்றன
எங்கெங்கும் காண்கிறேன்
அறைகூவியபடி
போராடியபடி
அடிவானத்தில் பாய்மரங்கள் விரிவதை
யூலிஸின் கப்பல்கள்
நாடு திரும்புகின்றன
தொலைதூர கடலில்
எழுகதிர் தோன்றுகிறான்
முன்னேறும்
மனிதனின் பொருட்டு
நான் சபதம் செய்கிறேன்.
மனித எதிரியே
சமாதானம் இல்லை ஒரு போதும்
கடைசிவரை போராடுவேன்
நான் போராடுவேன்.



உங்கள் எழிற்ச்சி கவிதை கண்டேன் அருமை நண்பா
கனவுகளை காலை போழுது கலைத்திவிடலாம்,கண்களில்லிருந்து மட்டும். அவைகள் அமிழ்வதில்லை இதயத்தில் எப்போதும் எழும்
தாகம் தணிவது இல்லை தேடல் கிடைக்கும் வறை வசிமரம் கிலைகளை வெட்டலாம் மீண்டும் நான் துலிர்வேன்
nallaka erukkirathu kaavithai