insurance, versicherung, mobile, phone, sales, tax, download, security, mortgage, download, upload, krankenversicherung, private

Posts tagged with the keyword: ‘தோகை-46’

வரலாறு உங்கள் முகங்களில் காறி உமிழும்

வரலாறு உங்கள் முகங்களில் காறி உமிழும்

தினமும் கிடைக்கும் வன்னிச் செய்திகள் மனதை பிழிந்தெடுக்கின்றன. உடனே நண்பர் கருணாகரன் எப்படி இருக்கின்றாரோ! திருமாஸ்டர் எப்படி இருப்பார், திருவையாறில் இருந்த நிலாந்தன் எங்கிருப்பார். அமரதாஸ், வளநாடன், இனுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்கள் எல்லாம் என்னவானார்கள், எங்கிருக்கிறார்களோ. ஒவ்வொரு முறை வன்னிச் செய்திகளை கேட்க நேரும் போதெல்லாம் இப்படித்தான் மனதில் எண்ணங்கள் எழும். ஆனால் இவர்கள் மட்டுமா எனது உறவுகள். அங்கு மரத்தின் கீழ் மழை பெய்தால் ஒதுங்குவதற்குக் கூட இடமில்லாமல் அல்லல்படும் இலட்சக்கணக்கான மக்கள் அனைவரும்தானே நமது உறவுகள். என்ன செய்வது மனித மனம் என்னதான் விசாலமான பார்வைகளை சேமித்துக் கொண்டாலும் சில வேளைகளில் அதனையும் கடந்து நமக்கு நெருக்கமான உறவுகளை தேடத்தான் செய்கிறது. நமக்கு நெருக்கமானவர்களுக்கு என்ன நடந்திருக்குமோ என்று மனம் பதறுகிறது.

ஈழத் தமிழர்களின் மரபான இசையும் நடனமும்

ஈழத் தமிழர்களின் மரபான இசையும் நடனமும்

ஈழத்தமிழர்கள் உலகில் வாழ்கின்ற எல்லா சமூகங்களையும் போலவே தமக்கான தனித்துவமான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டிருக்கின்றனர். பல்லாயிரமாண்டு பழமையும் புதிய பண்பாடுகளின் காலநீட்சியையும் பெற்றுள்ள ஈழத்தமிழர்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். இன்று உலகில் ஈழத்தமிழர்கள் வாழாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு அவர்களின் உலக வெளி பரந்துள்ளது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத அடையாளச் சிக்கல்களை உலக வெளியி;ல் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றுள்ளமையை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.

கவிஞர் தீபச்செல்வன் – நேர்காணல்

கவிஞர் தீபச்செல்வன் – நேர்காணல்

வன்னியில் உலகத்தில் நடந்திராத கொடுமையான போர் நடக்கிறது. தமிழ் மக்கள் சொற்களால் எழுத முடியாத துயரங்களை சுமக்கிறார்கள். வன்னி மண்ணை கையப்படுத்த வேண்டும் என்ற மண் வெறியில் அரசு நிற்கிறது. உணவு மருந்து வாழிடம் எல்லாவற்றையும் இழந்து அரசின் பயங்கர ஆயுதங்களுக்கு அஞ்சியபடி இங்கு ஒரு வாழ்க்கை நடக்கிறது. குழந்தைகள் பெண்கள் மாணவர்கள் என்று மக்கள் எல்லோருமே அரச நோக்கங்களால் பலிவாங்கப்படுகிறார்கள். தமிழ் மக்களின் கனவையும் விடுதலை உணர்வையும் அழிக்கிற திட்டத்துடன் விடாப்பிடியான போரை நடத்துகிறது.

மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்

மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்

சிலவேளை மாடுகள் பட்டியை பிரிந்து செல்ல மறுத்திருக்கலாம்.
மேய்ச்சல் தரைகளில் குண்டுகள் காத்திருந்தன. மாதா மாடுகளை அழைத்து வைத்திருக்கிறாள். மிஞ்சியிருக்கும் இரண்டு மாடுகளின் சொற்கள் சேற்றில் புதைந்து கிடக்கின்றன. மாதாவின் தலை அவளது கைகளுக்கு எட்டாமல் விழுந்திருக்கிறது. மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும். தடைசெய்யப்பட்ட பிரதேசத்தில் வாழுகிற மாடுகளாயிருந்தன. தடைசெய்யப்பட்ட குழந்தைகளுக்கு பால் கொடுத்திருந்தன. ஒரு குழந்தை வாய்க்காலில் மறைந்து தப்பியிருக்க மாட்டுக்கன்றுகள் பால் காயு முன்பாகவே இறந்து கிடக்கின்றன.

காலத்துயரும் காலத்தின் சாட்சியும்

காலத்துயரும் காலத்தின் சாட்சியும்

கவிஞர் சு.வில்வரெத்தினம் மறைந்து இரு ஆண்டுகள் ஆகின்றன. இந்த இரண்டு வருடங்களில் ஈழ அரசியலில் பல மாற்றங்களும் அதனால் ஏற்பட்ட திடீர் நெருக்கடிகளும், ஒருவகையான சோகமும் பெருமளவிற்கு இலக்கியம் சார்ந்த உரையாடல்களை குறைத்திருக்கிறது. யுத்தம் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை தன்வசப்படுத்தியிருக்கும் எந்தவொரு இடத்திலும் நேரக் கூடிய ஒன்றுதான் இது. இராணுவ வெற்றிகளே எமக்கான நற்செய்தியாக இருக்கும் சூழல். எவர் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் சமகாலத்தின் உண்மை.

காலிமண்டபமும், கடவுள்களும்…

காலிமண்டபமும், கடவுள்களும்…

அது முதலில் ஒரு பன்றிகள் வளர்க்கும் இடமாகத்தான் இருந்தது. பெரிய பண்ணையென்றில்லா விட்டாலும் பன்றிகளை வளர்த்துப் பாராமரித்து, இறைச்சிக்காய் வெட்டிப் பதனிடுகின்ற ஒரு சுமாரான தொழிற்சாலை. அதில் 15 பேர் வரை வேலை செய்தார்கள். அந்தத் தெரு வீதியெங்கணும் பன்றிகளின் இரத்தவெடிலும், சேற்று நாற்றமும் மூக்கைத் துளைத்துப் படாத பாடு படுத்தும்.

திருக்கோணமலையில் கவிஞர் சுவியின் நினைவு கூரல்

திருக்கோணமலையில் கவிஞர் சுவியின் நினைவு கூரல்

கவிஞர் சு.வில்வரத்தினம் மறைந்து இரண்டாண்டுகள் பூர்த்தியாகிய நிலையில் அவரை நினைவு கூரும் வகையில், அவரது மறைவு தினமான  09-12-2008 அன்று திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. திருகோணமலை கலை இலக்கிய நண்பர்களும், ‘நீங்களும் எழுதலாம்’ சஞ்சிகையும் இணைந்து நடாத்திய இந் நிகழ்வானது எழுத்தாளர் நந்தினிசேவியர் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி. செ.யோகராசா ‘சு.வியின் கவிதைகளில் பாடு பொருள்’ என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
நந்தினி சேவியர் தனது தலைமையுரையில், கவிஞர்.சு.விக்கும் தனக்கும் உள்ள [...]

விளம்பரம் Lunarpages.com Web Hosting
காப்புரிமை: © 2002 - 2009 அப்பால் தமிழ் - அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது | வலையமைப்பு: ntwoseven | நன்றி: wordpress