
கவிஞர் சு.வில்வரெத்தினம் மறைந்து இரு ஆண்டுகள் ஆகின்றன. இந்த இரண்டு வருடங்களில் ஈழ அரசியலில் பல மாற்றங்களும் அதனால் ஏற்பட்ட திடீர் நெருக்கடிகளும், ஒருவகையான சோகமும் பெருமளவிற்கு இலக்கியம் சார்ந்த உரையாடல்களை குறைத்திருக்கிறது. யுத்தம் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை தன்வசப்படுத்தியிருக்கும் எந்தவொரு இடத்திலும் நேரக் கூடிய ஒன்றுதான் இது. இராணுவ வெற்றிகளே எமக்கான நற்செய்தியாக இருக்கும் சூழல். எவர் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் சமகாலத்தின் உண்மை.

கவிஞர் சு.வில்வரத்தினம் மறைந்து இரண்டாண்டுகள் பூர்த்தியாகிய நிலையில் அவரை நினைவு கூரும் வகையில், அவரது மறைவு தினமான 09-12-2008 அன்று திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. திருகோணமலை கலை இலக்கிய நண்பர்களும், ‘நீங்களும் எழுதலாம்’ சஞ்சிகையும் இணைந்து நடாத்திய இந் நிகழ்வானது எழுத்தாளர் நந்தினிசேவியர் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி. செ.யோகராசா ‘சு.வியின் கவிதைகளில் பாடு பொருள்’ என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
நந்தினி சேவியர் தனது தலைமையுரையில், கவிஞர்.சு.விக்கும் தனக்கும் உள்ள [...]
December 20, 2008 | பிரிவுகள்:
கட்டுரை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அம்மாவை அக்கராயனில் நான் தேடிக்கொண்டிருந்தேன் ஷெல்களுக்குள் அம்மா ஐயனார் கோயிலை விழுந்து கும்பிட்டாள் ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது. நேற்று நடந்த கடும் சண்டையில் சிதைந்த கிராமத்தில் கிடந்தன படைகளின் உடல்கள் கைப்பற்றப்பட்ட படைகளின் உடல்களை கணக்கிட்டு பார்த்தபடி சிதைந்த உடல்கள் கிடக்கும் மைதானத்தில் பதுங்குகுழியிலிருந்து வெளியில் வந்த சனங்கள் நிறைகின்றனர். பக்கத்து வீட்டில் போராளியின் மரணத்தில் எழுகிற அழுகையுடன் இன்றைக்கு நாலாவது தடவையாக திடுக்கிட்டு எழும்பிய அம்மா
September 17, 2008 | பிரிவுகள்:
கவிதை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

இப்படியாக இருந்து வரும் நாளொன்றில் இங்கோர் ஈரவலயக் காட்டினில் புயலடித்து ஓய்ந்திருந்தது. தூறல் மழையும் ஈரலித்த காற்றும் ஓயாதிருந்தது. வேனிற் காலமும் தள்ளிப் போயிற்று. குழந்தைகளோ புயல் துழாவிச் சென்ற காட்டினைக் காணவும் அக்காட்டிடை உலவவும் ஆவல் கொண்டிருந்தனர். அவர்தம் ஆவல் மேலிட வீட்டின் மூலை முடுக்கிலும் புத்தக அடுக்கிலும் நாற்புற சுவரிலும் தொங்கத் தொடங்கின காடுகள். காடென்றால் பெரு விருட்சங்களும் நெடு மரங்களும் பற்றைகளும் செடி கொடிகளுமாய் அடர்ந்து கிடக்கும் காடுகளவை.
September 16, 2008 | பிரிவுகள்:
கவிதை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

அவரைத் தொடர்ந்து “அப்பால் தமிழ்” இணையத்தள நெறியாளரும், சிறந்த மேடைப்பேச்சாளருமான கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினார். இளந்தலைமுறையினர் மீது நம்பிக்கை கொள்ளுதல் பற்றியும், தலைமுறை இடைவெளியை குறைப்பதுபற்றியும் குறிப்பிட்ட அவர், இன்னும் இருபது ஆண்டுகளில் தமிழ் அழியப் போகிறது என்று எதிர்காலம் பற்றி புலம்புவதை தவிர்த்து – இப்படியான இளைஞர்களை வரவேற்று செயலில் இறங்கவேண்டும் என்பதை அழுத்திக் கூறினார்.