
தினமும் கிடைக்கும் வன்னிச் செய்திகள் மனதை பிழிந்தெடுக்கின்றன. உடனே நண்பர் கருணாகரன் எப்படி இருக்கின்றாரோ! திருமாஸ்டர் எப்படி இருப்பார், திருவையாறில் இருந்த நிலாந்தன் எங்கிருப்பார். அமரதாஸ், வளநாடன், இனுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்கள் எல்லாம் என்னவானார்கள், எங்கிருக்கிறார்களோ. ஒவ்வொரு முறை வன்னிச் செய்திகளை கேட்க நேரும் போதெல்லாம் இப்படித்தான் மனதில் எண்ணங்கள் எழும். ஆனால் இவர்கள் மட்டுமா எனது உறவுகள். அங்கு மரத்தின் கீழ் மழை பெய்தால் ஒதுங்குவதற்குக் கூட இடமில்லாமல் அல்லல்படும் இலட்சக்கணக்கான மக்கள் அனைவரும்தானே நமது உறவுகள். என்ன செய்வது மனித மனம் என்னதான் விசாலமான பார்வைகளை சேமித்துக் கொண்டாலும் சில வேளைகளில் அதனையும் கடந்து நமக்கு நெருக்கமான உறவுகளை தேடத்தான் செய்கிறது. நமக்கு நெருக்கமானவர்களுக்கு என்ன நடந்திருக்குமோ என்று மனம் பதறுகிறது.
January 15, 2009 | பிரிவுகள்:
கட்டுரை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

சிலவேளை மாடுகள் பட்டியை பிரிந்து செல்ல மறுத்திருக்கலாம்.
மேய்ச்சல் தரைகளில் குண்டுகள் காத்திருந்தன. மாதா மாடுகளை அழைத்து வைத்திருக்கிறாள். மிஞ்சியிருக்கும் இரண்டு மாடுகளின் சொற்கள் சேற்றில் புதைந்து கிடக்கின்றன. மாதாவின் தலை அவளது கைகளுக்கு எட்டாமல் விழுந்திருக்கிறது. மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும். தடைசெய்யப்பட்ட பிரதேசத்தில் வாழுகிற மாடுகளாயிருந்தன. தடைசெய்யப்பட்ட குழந்தைகளுக்கு பால் கொடுத்திருந்தன. ஒரு குழந்தை வாய்க்காலில் மறைந்து தப்பியிருக்க மாட்டுக்கன்றுகள் பால் காயு முன்பாகவே இறந்து கிடக்கின்றன.
January 1, 2009 | பிரிவுகள்:
கவிதை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

போர் மற்றும் அதன் அதிகாரத்திடம் காலம் தொடர்ந்து நசிபடுகிறது. தப்ப முடியாமல் சனங்களை வதைக்கிறது. எதிர்பார்ப்புக்களை தின்று அவலங்களை புதுப்பிக்கிற அதன் கோரப் பசியால் வாழ்வு பற்றிய ஆசை யாருக்குமில்லை.“நாட்டு நிலமையை யோசித்தால் அது வேறு கவலை நீங்கள் எல்லாம் வந்து போகக்கூடிய நிலமை எப்போ வரும் என்ற ஏக்கம்” இந்த தீராத பசியிடம் நல்ல பதில்கள் வரமாட்டாது. வர முடியாது என்ற நம்பிக்கையற்ற தன்மை வெளிப்படுகிறது. எல்லாருமே போய்க்கொண்டிருக்க யாரால் திரும்பிவர முடியும். அல்லது திரும்பி வருவது பற்றி யோசிக்க முடியும். மண்ணைப் பிரிந்த மாதுமையின் வலி அம்மாவின் கடிதத்தில் முழுவதும் வதைபடுகிறது.
December 4, 2008 | பிரிவுகள்:
கட்டுரை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

போரே தீர்வென்று கோடுகளின் கீழாய் எழுதிச் செல்கிறேன் எல்லாம் மாறி உடைத்த பொழுதும் போர்க்களங்களின் முகங்கள் மாறவில்லை யுத்தம் உன்னையும் என்னையும் தின்பதற்காய் காத்திருக்கிறது காலம் நம்மிடம் துப்பாக்கியை வழங்கிவிட்டு மௌனமாக கிடக்கிறது. கருத்தப்பூனையைப்போல கருணாநிதி மேடையிலிருந்து இறங்கிச் செல்கிறார் நேற்றிலிருந்து கருணாநிதி கவிதைகளிலிருந்து பூனைகள் வெளியேறுகின்றன வாய் கட்டப்பட்டவர்களின் பேரணிகளிலும் பூனையின் கறுத்த மௌனம் ஊடுருவுகிறது.
November 12, 2008 | பிரிவுகள்:
கவிதை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

இராணுவப் பீரங்கிகளுக்குள் அப்பாவிகள் நிறைக்கப்பட்டிருக்கின்றனர் குருதிச்சுனையில் புதைந்த கவசவண்டிகள் அப்பாவிகளின் பிணங்களின் மேல் நகர்த்தப்படுகின்றன துப்பாக்கிகளின் ஒவ்வொரு தோட்டாக்களிலும் மனித உயிர்கள் குடியிருந்தன நாளைய பகல்கள் இன்றைய இரவுகளைக் கொடுத்து வேண்டப்பட்டுக் கொண்டிருந்தன நாளைய தீபாவளிக்குபட்டாசு வெடிக்கும் கனவுடன் தூங்கிய பிஞ்சுகளை எறிகணைகள் பட்டாசுகளாய் பிய்த்துப் போகிறன.
November 11, 2008 | பிரிவுகள்:
கவிதை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »