அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 21 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow சலனம் arrow பாரிஸில் மணந்த மல்லிகை !
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பாரிஸில் மணந்த மல்லிகை !   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: அநாமிகன்  
Wednesday, 06 October 2004

சென்ற அக்டோபர் 2-ம் திகதி புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் மூன்று நிகழ்வுகள் வித்தியாசமாகத் தடம்பதித்தன. 1) விம்பம் இலண்டனில் நடாத்திய குறும்படப் போட்டி. 2) பரிஸில் நடந்த தமிழர் பண்பாட்டு அறிமுக நிகழ்வு. 3. ஈழவர் திரைக்கலை மன்றம் பாரிஸில் நிகழ்த்திய « முற்றத்து மல்லிகையும் மணக்கும் » என்ற பகலிடக்குறும்பட ஒளிப்பேழை வெளியீட்டு நிகழ்வு.

இந்திய உபகண்டத்தில், இந்திய உதவியை இரு கைகூப்பி அழைக்கும் இக்காலத்தில்கூட சிறிலங்காப் பெருந் தேசியவாதிகளால் கவனிக்காமல் விட்டிருந்த காந்தி பிறந்த இத்தினத்தை ஆண்டகைத் தனத்துடன் டெல்லிப் பத்திரிகை சுட்டியபோது கொழும்பில் நமட்டுச் சிரிப்பு வெளிப்பட்டது ஒரு புறமும் - மறுபுறம் நீண்ட மௌன மொழியுடன் தொடரும்  தமிழ்த் தேசியத்தின் அசைவியக்கம்.

புலம் பெயர்ந்த தமிழர்களின் இறுகிப்போன வாழ்வோட்டத்தில் பாலைவனச்சோலைகளாக அமையும் சில நிகழ்வுகள்தான் மனதை வருடி வாழ்வில் இதத்தைத் தருவன. சேற்றில் முளைத்த காளான்களாயுள்ள தமிழ்த் தொலைக்காட்சிகளால் இரசனை மங்கி, பொதுப் புத்தியை இழக்கும் சூழலில், புலம்பெயர் கலை ஆர்வலர்களுக்கு தேனாக அமைந்தது 2004 அக்டோபர் இரண்டு. பாரிஸில் நிகழ்ந்த « முற்றத்து மல்லிகையும் மணக்கும் » நேர்த்தியாக அமைந்ததென்பது பாராட்டப்பட வேண்டியதாகும். புலம்பெயர்ந்த தமிழர்களால் தயாரிக்கப்பட்ட குறும்படங்களின் தொகுப்பை வெளியீடு செய்து, அதனை நிகழ்வாக்கி, அதில் பெரும் வரவேற்புடன் ஒளிப்பேழைகள் விற்றிருப்பதென்பது சாதாரணமானதொன்றல்ல.

ஈழத்தமிழர்களின் திரைக்கலை வளர்ச்சிக்காக ஐம்பது வருடங்களுக்கும் மேலாக உழைத்துக்கொண்டிருக்கும் திரைக்கலை இளைஞன் இரகுநாதனின் பின்புலத் தயாரிப்பில், திரைக்கலைக்காகவே மூச்சு விடும் மென்கலைஞன் பரா அவர்களது தலைமையில் நிகழ்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு கலைஞர்களும், படைப்பாளிகளும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டமை சிறப்புக்குரியது.திரைக்கலை முயற்சிகள் தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்துடன் தொடங்கியது நிகழ்வு. இலண்டனில் தயாரிக்கப்பட்ட இவ்விபரணப்படம் தகுந்த மனச் சூழலை அரங்கில் ஏற்படுத்தியது. படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்களைத் தேடிச் சென்ற கமெராவுடன் நாமும் கூடவே சென்ற உணர்வை ஏற்படுத்தியது.  இதன் மூலம் தயாரிப்பாளரது சமூக அக்கறை நன்குணரப்பட்டு இந்நிகழ்வில் தனித்துவத் தோற்றம் பெற்றார் தன்னார்வத் தமிழ்த் தாராளர் பாரிஸ்ரர் எஸ் ஜே ஜோசெப்பு. இலண்டனில் சுற்றிய கமெரா ஏனைய நாடுகளுக்கு வராத ஆற்றாமையை வெளிப்படுத்தியது எனக்கு அருகில் ஒரு குரல். இவ்வகைத் தயாரிப்பிலுள்ள சிரமங்களைப் புரிந்தவனாகையால் பேசாதிருந்தேன். இருள் விலக அரங்கத்தை கருத்துரைகளுக்காக அழைத்துச் சென்றார் பரா. சிறப்புரைஞர்களாக அழைக்கப்பட்டிருந்த முகுந்தனும், கி பி அரவிந்தனும் சமகால ஈழத் தமிழ்த் திரை வளர்ச்சிக்கான கருத்துகளால் அரங்கத்தை ஈர்த்தனர். நமக்கானதொரு திரையின் வளர்ச்சிக்கான சமூக அக்கறையை சபையோரிடமிருந்து வெளிப்பட்ட கரவோலி நன்கு புலப்படுத்தியது. தொடர்ந்த நிகழ்வில், கவிஞர் கி பி அரவிந்தனால் குறும்பட ஒளிப்பேழை வெளியிடப்பட முதற்பிரதியை மூத்த தத்துவவியலாளர் கந்தையா நவரேந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். அடுத்த தலைமுறைக் கலைஞர்ளான பாரிஸ் நல்லூஸ்தானின் ‘முகவரி’ தயாரிப்பாளர் குணா அவர்களும், நெறியாளர் வதனன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி அரங்கை நெகிழ்ச்சியூட்டினர். இது பாரிஸில் ஈழத் தமிழ் திரை ஆர்வலர்களது கலைப் பயணத் தொடரோட்டத் தடியை அடுத்த தலைமுறையினர் கையேற்கும் நிழ்வாகப் புலப்பட்டது.அடுத்து சலனத்தின் மூத்த உறுப்பினரும், தமிழ்த் தொண்டனுமான திரு à®…. குணசேகரம்  அவர்களால் அரங்கத்தின் கவன ஈர்ப்பைப் பெற்றிருந்த தாராளர் பாரிஸ்டர் எஸ் ஜே ஜோசெப்பு அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு சலனத்தின் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.இறுதியில், தன் மனம் திறந்த உரையால் அவையை கிறங்கடித்தார் ஜோசெப்பு. இலகுவான வார்த்தைகளின் கோர்வைகளாலான வாக்கியங்களால் தன் முயற்சியை விபரனப்படுத்தியது சிறப்பாக அமைந்தது. அயராத உழைப்பும், தன்னம்பிக்கையும் இலக்கு நோக்கிய பயணத்தை அடையும் தனது முதன்மைக் காரணிகளெனக் குறிப்பிட்ட இவர், இக்குறும்படங்கள் ஒவ்வொன்றும் சுமார் 3000 ஈரோக்கள் செலவில் தயாரிக்கபட்டதாக வெளியிட்ட தகவல் சபையை ஆச்சரியப்படுத்தியது. கூத்துதொடர்பில் தனக்கிருக்கும்அதீத ஈடுபாடும், தனது பள்ளி நண்பன் இரகுநாதனின் புகலிட உறவும் இத்தகைய பணியைச் செய்ய வைத்ததென்னபதை அழகான கரடி பிடித்த  உவமைக்கதையுடன் சொன்னது நன்றாக இருந்தது.  இத்துடன் தற்போது தனது தேடலால் திரைத் தொழில் நுட்டம் தொடர்பாகத் தான் கற்றுவருவதை  தன்னடக்கத்துடன் சொன்னது ஒரு பாடமாக இருந்தது.

குறும்படங்களில் சில காட்டப்பட்டு நிகழ்வு நிறைவுற்றது.

தெறித்த சில கருத்துகள்

1. நாங்கள் தயாரித்த படத்திலமைந்த உணவகக் காட்சிக்காக 500 ஈரோக்கள் கொடுக்கப்பட்டது.   -

விலாசம் தயாரிப்பாளர் குணா

2. ஈழத்தமிழ்ச் சினிமாவின் முடக்கம் தொடர்பாக திருகோணமலையிலிருந்து எழுதிய யசீந்திராவின்

கட்டுரையை அனைவரும் படிக்கவேண்டும். – கி. பி. அரவிந்தன்

3. நிறைவாக இருந்தது கருத்துகள் - பார்வையாளர்களில் ஒருவர்.

4. தாகம் குறும்படம் எந்தநாட்டில் புலப்பட்டதென்பதைக் அறிய முடியாதிருந்த எனக்கு என்னுடன் படம்பார்த்த

பார்வையாளர் ஒருவர் குப்பையை கையாளும் காட்சியில் பிரான்சின் தனித்துவம் தெரிவிக்கப்பட்டதாகச்

சொன்னது ஆச்சரியமூட்டியது. – முகுந்தன்
06. 10. 2004


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 21 Apr 2024 08:08
TamilNet
HASH(0x5638ee4442b0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sun, 21 Apr 2024 08:08


புதினம்
Sun, 21 Apr 2024 08:08
     இதுவரை:  24789783 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5182 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com