அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 21 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow சலனம் arrow குறும்படங்கள் எழுப்பும் கேள்விகள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குறும்படங்கள் எழுப்பும் கேள்விகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: -ஈழநாதன்.  
Tuesday, 09 November 2004

சமாதனச் சுருள் திரைமாலை வரிசையில் வந்த  குறும்படங்கள் எழுப்பிவிட்டுச் சென்றிருக்கும் கேள்விகள் பல.
சமாதானச் சுருள்  திரைமாலை வரிசையில் வந்த 7 குறும்படங்களுமே, யுத்தகாலத்தின் பின்னரான யாழ்ப்பாணத்துக் குழந்தைகளின் வாழ்வியலை ஊடறுத்துச் செல்லும் உண்மைகளை திரையில் செதுக்கியதாக காணப்படுகின்றன ஒவ்வொரு குறும்படமும் பலமானதொரு விவாதப் பொருளை கருப்பொருளாகக் கொண்டிருக்கின்றன.

பொதுவில் சிறுவர் மீது யுத்தத்தின் கோரச்சுவடுகள் எவ்வாறு ஆழப்பதிந்துள்ளன என்பதை வெவ்வேறு பார்வையில் வெவ்வேறு பரிமாணத்தில் காட்ட முயன்று, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன.இவற்றில் மையப்பொருளாகக் காட்டப்பட்டுள்ள பிரச்சனைகள் போர் நடக்கும் சூழலில் சமுதாயத்தில் வயது வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவான பிரச்சனைகள் தான் என்றாலும், அவற்றை சிறுவர்களின் பார்வையில் காட்டியிருப்பது பிரச்சனையின் தீவிரத்தன்மையை எடுத்துக்காட்டுவதோடு இப்படங்களால் ஏற்படக் கூடிய தாக்கத்தையும் கூட்டுகின்றது.

இந்த வரிசையில் கண்ணிவெடியால் காலிழக்கும் சிறுமியின் கதையாகிய 'செருப்பு' குறும்படமும்,அத்தியாவசிய மருந்துத் தட்டுப்பாட்டால் உயிரிழக்கும் சிறுவனை மையமாகக் கொண்ட 'தடை' குறும்படமும் போரினால் சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற உயிரிழப்பு அங்கவீனம் ஆகியவற்றை பேசுகின்றன.
'
'அதிகாலையின்' இருள் சிறுவர்களின் சமாதானத்துக்கான எதிர்பார்ப்பையும்,'மூக்குப்பேணி' ஒரு சிரற்வனின்  கலாச்சாரப் பண்பாட்டு அடையாளங்கள் பற்றிய பார்வையையும் தளங்களாகக் கொண்டுள்ளன.
'அழுத்தம்' இவற்றிலிருந்து சிறிது மாறுபட்டு சிறுவர் மீது எமது சமூகம் பலவந்தமாகத் திணிக்கும் சிந்தனைகள் பற்றிப் பேசுகின்றது.
'ஒளித்துப் பிடித்து',பெரும்பான்மை இனச் சிறுமி வாய்மொழியாக போர் அவர்கள் மீது எவ்வாறு திணிக்கப்படுகின்றது என்பதையும் அதனால் எவ்வாறு பெரியவர்கள் சிந்தனையோட்டத்துக்கே அவர்களும் வரவேண்டி இருக்கின்றது என்பதையும் பேசுகின்றது.

மற்ற குறும்படங்களைப் போல பொதுவாக போர்ச்சூழலில் பெரியவர்களைப் போலவே குழந்தைகளும் பாதிக்கப்படுவதைக் காட்டாமல் தனியே குழந்தைகளுக்கு மட்டுமான பிரச்சனையைக் எடுத்துக் கையாண்டிருக்கும் விதத்தில் 'போருக்குப் பின்' திரைப்படம் மற்றவற்றிலிருந்து தனித்துவமான கவனிப்புப் பெறவேண்டியதொரு படமாகும்.

 à®µà®´à®•à¯à®•à®®à®¾à®© இயக்கம்,கதை,தொழினுட்பம்,நடிப்பு என்னும் தளங்களில் இப்படங்களைப் பற்றிய பார்வையை விடுத்து அவை எழுப்பிவிட்டுச் சென்றிருக்கும் கேள்வியை மட்டும் இன்னும்  விரிவாகப் பார்க்கவேண்டி உள்ளது.

வெள்ளிவிழாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது போராட்ட வரலாறு.அப்படிப் பார்த்தால் 80களில் ஆரம்பித்து நடைபெற்ற கலவரங்களாலும், காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளாலும்,போராலும் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்த குழந்தைகள்,அங்கவீனத்துக்குள்ளகிய குழந்தைகள்,வெடிப்பொருட்களின் தாக்கத்தால் அங்கவீனர்களாகவே பிறக்கும் பிள்ளைகள் உளவியல் ரீதியான தாக்கத்துள்ளாக்கப்பட்ட பிள்ளைகள்,என நூற்றுக்கணக்கான குழந்தைகளை எமது சமுதாயத்துக்குத் தந்திருக்கிறது இந்த முடிவற்ற போர்.

இன்னும் நிரந்தர சமாதானம் ஒன்று எட்டப்படாத நிலையில் இன்னும் இவ்வாறான குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படக் கூடிய சாத்தியக் கூறு வேதனை தருவதாக உள்ளது.

இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்நிலை தொடரப் போகின்றது?,தீர்வுக்கான வழிமுறைகள் என்ன?,பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக நாம் எவ்வாறான உதவிகளை மேற்கொண்டிருக்கிறோம்? என்பதே இக்குறும்படங்கள் எமக்கு விட்டுச் சென்றிருக்கும் கேள்விகள்

'யுனிசெவ்' நிறுவனத்தால் சிறுவர் மீதான வன்முறைகள் என வரையறுக்கப்பட்ட வன்முறைகள் அத்தனையையும் அனுபவித்து வரும் இளஞ்சமுதாயம் எம்மத்தியில் வளர்ந்து வரும்போது,சர்வதேசத்தின் கண்களுக்குத் தெரிவதெல்லாம் புலிகளில் இயக்கத்தில் சேரும் சிறுவர்கள் தான்.
மிஞ்சி மிஞ்சிப் போனால் உல்லாசப் பிரயாணிகளால் அதிகரிக்கும் சிறுவர் மீதான பாலியல் கொடுமைகள் பற்றி அறிக்கை விடுவதுடன் நிறுத்திக் கொள்கின்றன.தமிழ் இனம் மீதான அடக்குமுறை பொதுப்பிரச்சனையாகப் பேசப்படும் நேரத்தில் சிறுவர் மீதான வன்முறைகள் தனியாகப் பேசப்படாமையின் விளைவே இது எனக் கூறலாம்.

இவ்வாறான ஒரு சூழலில் சர்வதேசத்தின் பார்வைக்கு எமது சிறுவர்களின் பல்வகைப்பட்ட பிரச்சனைகளை எடுத்துச் செல்வதில் இக்குறும்படங்கள் பெரும்பங்கை ஆற்றியிருக்கின்றன.

கூடவே தொடரும் போர் நிறுத்தப்பட்டு சுமுக வாழ்வு திரும்பவேண்டியதன் அவசியத்தை போரில் ஈடுபடும் இரு தரப்பினருக்கும் உணர்த்தும் வகையில் இவை அமைந்துள்ளன.
 
 à®µà®©à¯à®®à¯à®±à¯ˆà®•à®³à¯ நிறுத்தப்பட்டு எமது சிறுவர்களும் மற்ற நாட்டுச் சிறுவர்களைப் போன்று இளவயதினருக்குரிய சுதந்திரத்தையும் உரிமைகளையும் அனுபவிப்பதற்கு இக் கொடும்போர் நிறுத்தப்படவேண்டும் அதற்கான யதார்த்தப் புறநிலைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச சமூகத்தைத் தூண்டும் வண்ணம் இன்னும் பல குறும்படங்கள் வெளிவரவேண்டும்.


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 21 Apr 2024 08:08
TamilNet
HASH(0x5638ee4442b0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sun, 21 Apr 2024 08:08


புதினம்
Sun, 21 Apr 2024 08:08
     இதுவரை:  24789797 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5191 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com