அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 14 September 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தேகை - 12 arrow நீலப்புத்தகம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நீலப்புத்தகம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: -ஸ்ரீஸ்கந்தராஜா.  
Monday, 06 December 2004

(யேர்மன் வாழ் தமிழரிடையே அண்மைக் காலத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் 'ஊருக்கு அனுப்பபோகிறார்கள்' என்பதுதான். இது தொடர்பான விளக்கத்தை இச் செய்திக் கட்டுரை விபரிக்கின்றது. வாழ்வியலுடன் சம்பத்தமான இவ்விடயத்தின் முக்கியத்துவம் கருதி இங்கு இதனை பிரசுரிக்கின்றோம். இதனை பிரசுரிப்பதற்கு உதவிய இலக்கிய ஆர்வலர்களான திரு.புத்திசிகாமணி, மண் சஞ்சிகை ஆசிரியர் திரு.சிவராசா ஆகியோருக்கு எமது நன்றிகள்.)

வெளிநாட்டவரின் அகதிகள் வருகையை கட்டுப்படுத்துவதற்காகவும்; அகதிகளாக வந்தவர்கள் அந் நாட்டின் பிரஜைகளாக பெரும் தொகையாக மாறிவரும் நிலையினை குறைப்பதற்காகவும்; ஐரோப்பிய நாடுகளான சுவிஸ் ஜேர்மனி டென்மாக் நெதர்லாந்த் போன்ற அகதிகள் பெருந்தொகையாக வாழும் நாடுகள் காலத்துக்கு காலம் அகதிகளுக்கான சட்டங்களை பரிசீலி;த்து மாற்றுவது காலம் காலமாக நடை பெறும் ஒன்று.
அந்த ரீதியில் 1.10.2004ல் இருந்து சிறீலங்கா மக்களுக்கு அரசியல் அந்தஸ்து பெற்று வழங்கப்பட்ட (Anerkennung) ஜேர்மன் பிரயாண கடவுப் புத்தகமான (Reisepass) என்ற நீலப் புத்தகத்தினை திரும்பப்  பெறும் சட்ட மாற்றத்தினை கொண்டுவந்துள்ளது.
அண்மைக் காலமாக  நீலப் புத்தகம் பெற்ற பலருக்கு வெளிநாட்டவர் திணைக்களத்திலிருந்து ஒரே வகையான கடிதங்கள் வந்து பலரும் குழம்பி இருப்பதையும்; கலக்கமடைத்திருப்பதை நாம் காண்கின்றோம்.
இதனால் அவர்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியே பெரிதும் கவலைப் படுவதையும் உணரமுடிகின்றது.
இன்று இலங்கையில் மீண்டும் உங்களால் வாழமுடியும் என்ற நோக்கத்துடன் ஜேர்மனிய அரசு இக் கடிதங்களை சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பி 4 வாரங்களில் இதற்கான பதிலை தரும்படியும் கேட்டுள்ளது.
தாங்கள் இந்த நாட்டின் அகதி அந்தஸ்து பெற்றபின் அதைப்பற்றிய எந்த சிந்தனையோ செயலோ இன்றி நிம்மதியாக நிமிர்ந்து வலம் வந்த மக்களுக்கு மீண்டும ஓர் தலையிடியை இந்தநிலை தந்துள்ளது.
நாட்டில் புதிய சந்திரிகா அரசாங்கம் விடுதலைப்புலிகளுடனான சமாதானப் பேச்சவார்த்தை மேடைக்கு இன்னும் வராத வேளையில்; தமிழீழத்தில் தங்கள் சொந்த காணி நிலங்களில் மக்கள் மீண்டும் குடிவந்து வாழமுடியாத சூழலில்; மீண்டும் போருக்கான ஆயுதங்களையும் விமானங்களையும் கப்பல்களையும் கொள்வனவு செய்யும் அரச- ராணுவ உள்நிலையில ஜேர்மன் அரசு இப்படியான ஒரு முடிவை கொண்டுவந்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஜீரணிக்கமுடியாத ஒன்றே.
இந்த பிரச்சனையுள் மூழ்கியுள்ள எம் மக்களுக்கு சில அடிப்படை விடயங்களை தெளிவு படுத்துவதற்காக ஜேர்மன் முல்கைம்வாழ் சமூக சிந்தனையாளரும தகுதிகாண் மொழிபெயர்ப்பாளருமான திரு அ.ரகுநாதன் அவர்களுடன் அகதி விடய ஆலோசகர் Diagonisch அமைப்பினைச் சேர்ந்த திருமதி அனெற்றா பாஸ்பென்டரும் இணைந்து ஆலோசனை விளக்க கூட்டமொன்றினை சென்ற 04.11.2004 வியாழக்கிழமை முல்கைம் கோவில் மண்டபத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மக்களுடன் நடத்தினர்.
இதற்கு பிரதம அதிதியாக முல்கைம் நகர வெளிநாட்டு திணைக்களத் தலைவர் Hr.Brost  அவர்கள் விசேடமாக வருகை தந்திருந்தார் மற்றும் 1.1.2005 ல் வரவுள்ள வேலை இழந்தவர்க்கான நிதி வழங்கு (Arbeitslosen geld II) புதிய சட்டங்கள் பற்றிய விளக்கங்கள் தருவதற்காக முல்கைம் Arbeitsamt  ல் இருந்து விசேடமாக Hr.Seitz,Hr.Klarg ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
முல்கைம் வெளிநாட்டு அலுவலகத்தை சேர்ந்த திரு ப்றொஸ்ற் அவர்கள் தன்னுரையில்:
-அண்மைக்காலமாக நீலப்புத்தகம் என்று உங்களால் அழைக்கப்படுகின்ற அகதிகள் என்ற தகுதி ஏற்றுக்கொள்ளப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட பிரயாண கடவுப்புத்தகத்தினை மீளப் பெறுவது சம்பந்தமான கடிதங்கள் அனேகமானோருக்கு வந்துள்ளன.அந்தக் கடிதம் கண்டதும் உங்களுக்கு
ஒரு பெரிய அதிர்ச்சியும் பதட்டமும் குழப்பமும் ஏற்பட்டிருக்கும் என்பதை என்னால் உணர முடிகின்றது. நீங்களெல்லாம் பயப்படும் அளவிற்கு அதுவொரு பெரிய பாதிப்பான மாற்றமல்ல என்றே என்னால் முதலில் ஆறுதல் கூறமுடியும். என்னால் சொல்லக்கூடிய ஆலோசனை என்னவெனில அப்படியான கடிதங்கள் பெற்றவர்கள் அந்தக் கடிதத்தினை எடுத்துக்கொண்டு வெளிநாட்டுத்தொடர்புக் காரியாலயத்திலுள்ள உங்களுக்குப் பொறுப்பான உத்தியோகத்தரிடம் காட்டி உங்களது தற்போதய வாழ்நிலை பற்றிய விளக்கத்தினை தெளிவுபடுத்தி அடுத்து நீங்கள் எடுக்கவேண்டிய படிநிலைபற்றிய ஆலோசனையை அவரிடமிருந்து விபரமாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு எப்பவும் உதவ நாங்களும் டியகொனிஸ் நிறுவனமும் காத்திருக்கின்றோம்.
இந்த முல்கைம் நகரில் 20 வருடங்களாக பார்க்கும் முகங்கள் இளைஞர்களாக வந்து நீங்கள் மாறுபட்ட இந்த நாட்டு கலாச்சாரத்துடன் முட்டி மோதி உழைத்து இன்று முடியெல்லாம் விழுந்து முதியவராகிவிட்டீர்கள். உங்கள் பிள்ளைகள் எல்லாம் இங்கே பிறந்து படித்து இந்த நாட்டு சமூகமாகி விட்டனர். அவர்களை எல்லாம் பாதிக்கும்படியாக எந்தவொரு பாதகமான ஒரு நிலையினை உருவாக்கி MH-Ausländeramt  என்றும் உங்களுக்கு தீங்கு இழைக்காது. எல்லா கடிதங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு விடயத்தினை நீங்கள் கவனிக்கலாம். அதில் இலங்கையில் உள்ள அரசியல் பிரச்சனை அடிப்படை ரீதியில் தீர்க்கப்பட்டு எல்லோரும் எங்கும் வாழக்கூடிய சுமூகமான வாழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அதன் அடிப்படையில்தான் Bundesamt உங்களது அகதிகள் கோப்புக்களை (File) எடுக்கத் தொடங்கியுள்ளனர்;.
கடிதத்தின் படி கடிதம் உங்கள் கைகளில் கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து 4 வாரத்தினுள் உங்களுக்கு அங்கு வாழமுடியாத புதிய பிரச்சனைகள் இருந்தால் அதனைக் குறிப்பிட்டு கடிதம் ஒன்று நீங்கள் திணைகளத்திற்கு அனுப்பவேண்டும். அப்படி எந்த பதிலும் கொடுபடாமல் அல்லது சட்ட ஆலோசகரை சந்திக்காத வகையில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே கருதப்படும். எனவே உங்களுக்கு தந்த கால அவகாசத்தினை கவனத்தில் கொண்டு செயல்படவும். அதற்காக Jugendamt, Diagonis  உங்களுக்கு உதவிகள் தர Mülheim  நகரில் காத்திருக்கின்றோம்.ஆனால் 99 வீதம் இதனால் உங்களுக்கு சொல்லக்கூடிய பெரிய பாதிப்பு எதுவும்  வராது என்றே நான் நினைக்கின்றேன். அண்மைகாலமாக அகதிகள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் நிலையில் அவர்களை நாட்டைவிட்டு அப்புறப்படுத்தலாம் அல்லது குற்றச் செயல காரணங்களால் இந்த நாட்டுக்கு
இவர்கள் பாதகமானவர்கள் என்றால் திருப்பி அனுப்பலாம். ஆனால் நீங்கள் ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு காரணத்தால் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள். உண்மையான அகதிகளும் நீங்கள்தான். குறிப்பிட்ட காலம் இங்கே  நீங்கள் வாழ்ந்துவிட்டீர்கள். மனிதாபிமானமின்றி உங்கள் கழுத்தைப்பிடித்து வெளியில் தள்ளும்  வேலையை நாங்கள் ஜேர்மனிய அரசு என்றும் செய்யாது என்று முல்கைம் நகரைப்பொறுத்தவரை என்னால் உறுதியாகச்சொல்லமுடியும். சில விதிவிலக்குகள் இருக்கலாம். வருகிற 2005 ம் ஆண்டின்பின் அகதிகளாய் ஏற்றுக்கொள்ளப்படுபவர்கள் மூன்றுவருடதவணையில் அவர்களின் அகதி அந்தஸ்து மீள்பரிசீலனை செய்யப்பட்டு மாற்றங்கள் நிகழலாம்  ரத்தும் செய்யப்படலாம். 2005 ன் பின் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் விசாக்களில் இரண்டே இரண்டு
வகைகள் மட்டுமே உள்ளன அவை:1aufanthal elaubnis . 2.niederlassung elaubnisn என்பனவாகும். சிலர் தங்களது நீலப்புத்தகத்தில் உள்ள unbefristet  விசாவினை அகற்றி Berechtigung  எடுத்தால் என்னவென்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்வேன் இனி எந்தவிசா தருவதாகவிருந்தாலும் உங்கள் நாட்டுப் புத்தகத்தில்தான் தரப்போகின்றோம் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
இன்னும் இருக்கும் ஒன்றரைமாத காலங்களில் நீங்கள் விண்ணப்பித்து நாங்கள் கேட்கும் ஆவணங்கள் பத்திரங்கள் தயாரித்து டொச் மொழி தேர்வு பரிசீலிக்கப்பட்டு 71யுறோ பணமும் (ஒருவருக்கு) செலுத்த வேண்டும். இதற்குரிய காலம் சாத்தியமில்லாத மிகக்குறுகியது. வீணான முயற்சி என்றே சொல்வேன்.ஆனால் பற்றாக்குறையில் இருக்கும் எமது நகரத்திற்கு பணம் கொஞ்சம் கிடைக்க வாய்ப்புண்டு.அதை நான் உளமார வரவேற்கிறேன்.(சபையில் சிரிப்பு)
கேள்வி: நீலப்புத்தகத்தினை நீங்கள் மீளப் பறிப்பதற்கு முன்பு நாங்கள் இந்நாட்டு பிரழஐாவுரிமை பெறுவதற்கு வாய்ப்புண்டா? அப்படி விண்ணப்பிக்கும் பட்சத்தில் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

 
புதில்:  இந்த நீலப்புத்தகத்தினை மீளப்பெறும் திட்டம் ஈரான் ஈராக் ஆப்கானிஸ்தான் கொசோவா ஆகிய நாட்டவர்க்கும் தொடரவிருக்கின்றது. உங்களுக்கு கடிதம் வந்தால் சும்மா மண்டையை போட்டுக் குழப்பி சிக்கல்பட்டு; அலைந்து திரியாமல் எம்மிடம் வாருங்கள். நாங்கள் அதனை பரிசீலித்து உங்களுக்கு தகுந்தது நல்லது எதுவோ அதனைச் செய்வோம்.அப்படி பிரயாவுரிமை எடுப்பதென்றால் அது நினைத்தவுடன் முடியும் காரியமுமில்லை.எங்களது தேவைகளை இந்த குறிப்பிட்ட காலத்துள்   நிவிர்த்தி செய்யப்படவேண்டும். வேலை வீட்டுவசதி அத்தாட்சிபத்திரங்கள்  டொச்மொழித்தகுதி நன்நடத்தை என்று பலவிடயங்கள் திருப்திப்படவைக்க வேண்டும். இந்த ஒன்றரைமாத  காலத்தில் பயனுள்ள நடைமுறைபடுத்தக் கூடிய செயலில் இறங்குங்கள.


கேள்வி: இப்போது எனது நீலப்புத்தகத்தில் இருக்கும் காலவரையற்ற வாழ்விட அனுமதி (unbefristet) விசாவினை நாளை நான் கொண்டுவந்து தரும் இலங்கை புத்தகத்தில் மீண்டும் தரப்படுமா? அதற்கு என்ன உத்தரவாதம்?


புதில்:  நானாக எந்த உத்தரவாதமும் தரும் அதிகாரம் எனக்கில்லை. Bundesamt கொண்டுவரும் சட்டதிட்டங்களை செயல்படுத்துவதே auslandsamt ஆகிய எமது கடமையாகும். உங்களையெல்லாம் சங்கடப்படுத்தும் நோக்கம் எமக்கில்லை. தங்களது வாழ்க்கைச் செலவுகளை தாங்களே கொண்டுநடத்துபவர்களாயும் இந்த நாட்டிற்கு பாரமாக பாதகமாக இல்லாதவரை உங்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. நீங்கள் பிரச்சனை இல்லாதவரை எங்களால் உங்களுக்கும் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.மக்களது வதந்திகளை பெரிதுபடுத்த வேண்டாம். ஜேர்மனியில் பழமொழி ஒன்றுண்டு. அதாவது கொதிக்க கொதிக்க சமைப்பார்கள் ஆனால் ஆறவிட்டுத்தான் சாப்பிடுவார்கள். யாரும் சுடச்சுட சாப்பிடுவதில்லை. எனவே இதனைப்பற்றி அதிகம் கொதிக்காமல் அமைதியாய் செயல்படுங்கள். இதுவரை Befügnes என்ற அனுமதியில் வாழ்ந்தவர்களுக்கு இனிவரும் காலங்களில் ஒருபடி உயர்த்தி காலம் குறிப்பிட்ட Aufenthal elaubnis  வழங்கவிருப்பது மகிழ்ச்சியான விடயம்.


கேள்வி:      அகதி அந்தஸ்து பெற்ற நீலப்புத்தகம் பெற்றவர்கள் பிரயாவுரிமை பெற்றிருக்கின்றார்கள். அவர்களுக்கும் இப்படியான கடிதங்கள் வந்ததாக அறிகிறோம் உண்மையா?


புதில்:  அது எங்கேயோ விலாசத்தில் அல்லது பெயரில் ஏற்பட்ட தவறாய் இருக்கலாம். இந்தநாட்டு பிரயை ஆனவருக்கு அப்படியொரு நிலையெனில் நாளை எனக்கும் வரலாம். அப்படி ஏதாவது கடிதம் வந்தால் அதனை உங்கள் படுக்கையறையில் சட்டம் போட்டு தொங்கவிட்டு பார்த்து ரசியுங்கள்.(சிரிப்பு)

 
கேள்வி: நீலப்புத்தகம் பறித்தெடுக்கும் படலம் முதலில் இலங்கை மக்களிடமே பரீட்சிக்கஆரம்பித்திருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.அதற்கு இரு காரணங்கள் எம் மக்களிடையே பரவலாகக் பேசப்படுகின்றன. ஒன்று அதிகமான தமழ் மக்கள் அகதி நிலையினை ரத்துச்செய்துவிட்டு (அந்தப் புத்தகத்துடன் இலங்கை போகமுடியாத காரணத்தினால்) இலங்கை கடவுப்புத்தகத்தினை அதிகமாக பெறுவதாலும் அடுத்தது ஈராண்டு காலத்துக்கு மேலாக புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான யுத்தநிறுத்தமும் எனகின்றனர். இதுபற்றி உங்கள் அனுபவரீதியான தனிப்பட்ட கருத்தென்ன.


புதில்: ஒரு நிதானமான சிந்திக்கவேண்டிய யதார்த்தமான கேள்வி என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிகின்றது. ஆனால் இதில் தனிப்பட்ட எந்தக்கருத்தும் என்னால் கூறமுடியாது. காலத்துக்கு காலம் bundesamt சட்டங்களை மாற்றுவதற்கு உள்வெளி நாட்டு அரசியலும் சமூகவியல்களும் நீங்கள் சொல்வதுபோல் காரணமாக அமையலாம். மீண்டும் ஞாபகப்படுத்தகிறேன் bundesamt எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதே  எமதுதொழில். காரணம் கேட்பதல்ல.(ஆனாலும் அகதித் திணைக்களம் எடுக்கும் முடிவுகளை பல நகரங்கள் தான்தோன்றித்தனமாக நடைமுறைப்படுத்தாமை சுட்டிக்காட்டப்பட்டது)
முடிவாக இதுபற்றி நீங்கள் பெரிதாக பயப்படுவதற்கெதுவும் இல்லை. அரசியல் காரணங்களாலோ அன்றி வேறு தனிப்பட்ட காரணங்களுக்காகவோ வழங்கப்பட்ட அகதிகள் அந்தஸ்து நீலப் புத்தகம் புதிய காரணங்கள் பரிசீலிக்கப்பட்டு மீளப்பெறுவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. நீங்கள் இலங்கைப்புத்தகத்தில் தகுதியான விசாவினை பெறுவதற்கு உங்களை தயார் செய்து  கொள்ளுங்கள். மேலதிக ஆலோசனைகளுக்கு உங்கள் சட்ட ஆலோசகர்களை அணுகிக்கொள்ளலாம். இனி நீங்கள் அகதிகள்நிலை என்ற(53-56)வட்டத்திலிருந்து வெளிவந்து வெளிநாட்டவர் வாழ்நிலை Ausländer Gesetz    என்ற சதுரத்துள் அடங்குகின்றீர்கள். வெளிநாட்டவர் சட்டத்தின்படி இந்த நாட்டு சட்டத்தினை மதித்து இந்த நாட்டுக்கு பாரமாக பாதகமாக இல்லாதவரை எங்களால் உங்களுக்கு எக்காலமும் உபத்திரவம் இராது. புதிய வடிவில் வரும் விசாக்கள் திருப்தியாக அமைவது உங்கள் தொழில் வீடு நன்நடத்தை குழந்தைகள் எதிர்காலம் படிப்பு யேர்மன் சமூகத்துடனான ஈடுபாடு அல்லது தொடர்பு என்பன முக்கிய இடம் வகிக்கின்றன என்பது தெளிவாகின்றது.
1.12005 ஆம் ஆண்டு வரவுள்ள தொடர் வேலையிழப்பு நிதி(Arbeitslosengeld ll) பற்றிய திரு.கிளாக் அவர்கள் தந்த விளக்கத்தினை அடுத்த வெளியீட்டில் எதிர்பாருங்கள்.  நன்றி..

(இச் செய்திக் கட்டுரையில் வெளிவந்துள்ள கலைச் சொற்கள் யேர்மன் மக்களின் à®¤à¯‡à®µà¯ˆ கருதி à®Ÿà¯†à®¾à®šà¯ மொழியிலேயே  à®µà¯†à®³à®¿à®¯à®¿à®Ÿà®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯à®³à¯à®³à®©.)                                                           


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 14 Sep 2024 23:30
TamilNet
Even though I first met Viraj Mendis in Geneva, his reputation as a fearless advocate for Tamil liberation preceded him. The movement respected Viraj, and many of our leaders in the diaspora and the homeland sought his clarity and insight. I consider myself fortunate to have worked with him and learned from him.
Sri Lanka: Viraj exposed West?s criminalization of Tamil struggle


BBC: உலகச் செய்திகள்
Sat, 14 Sep 2024 23:24


புதினம்
Sat, 14 Sep 2024 23:24
















     இதுவரை:  25666374 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 12140 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com