அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 16 July 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 6 arrow ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Monday, 31 May 2004
பக்கம் 2 of 5

தான் எழுதும் கட்டுரையைப் படிப்பதற்கான ஆர்வத்தை தூண்டுகின்றேன் என்று ஒருவகை கண்ணாம்பூச்சி ஆட்டத்துடன் கட்டுரையை ஆரம்பிக்கும் ஜெயராஜ் முதலில் புலம்பெயர்ந்தோர் தமது தமிழ்மொழியை மறந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டை 'தமிழ் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றதா?" எனக்கேட்டு இளக்காரமாக முன்வைக்க முயல்கின்றார். அதற்கு உதாரணமாக அவர்கூறியுள்ள கதையை கேளுங்கள்.
'அண்மையில் சுவிஸிலிருந்து வந்திருந்த என் அக்காவின் பேரன் தன் மாமனைப் பார்த்து கேட்டானே ஒரு கேள்வி. ஊரே சிரித்துவிட்டது போங்கள். தன் அன்புப் பேரனுக்கு என் அக்கா ஆசையாசையாய் ஆனை வாழைப்பழம் வாங்கிக் கொடுக்க அவன் அதைத் தின்னும் அவதியில், குளிக்கத் தயாராய் துண்டோடு கிணற்றடியில் நின்ற தன் மாமனிடம் கொண்டோடிப்போய் பிளீஸ் அங்கிள் வாழைப்பழத்தை ஒருக்கா கழட்டித்தாங்கோ என்று கேட்க எங்கோ பார்த்துக் கொண்டிருந்த அந்த மாமன் அக்கேள்வியால் பதறியடித்து இடுப்பில் இருந்து துண்டை இறுகப் பொத்திய காட்சி கண்டு எங்கள் ஊரே சிரித்தது. வாழைப்பழத்தை உரித்து தாருங்கள் என்பதற்கு பதிலாக கழட்டித்தாருங்கள் என்கிறது ஈழத்தமிழினத்தின் பொறின் வாரிசு"
குழந்தையின் மழலைக் கூற்றிலும் வம்பு எண்ணந்தான் மேலெழுகின்றது கம்பவாரிசுக்கு. தனது மனவக்கிரத்தை மற்றவர்களிலும் தொற்ற வைக்கின்றார் ஆத்மீகவாதியான வம்பவாரிசு. அவர் கூறிய உதாரணத்திற்கும் புலம்பெயர்ந்த சமுகக் குழந்தையின் தமிழ் அறிவிற்கும் என்ன சம்பந்தம் என்றே புரியவில்லை. பாவம் அவர் மழலை மொழியை கேட்டதில்லைப்போலும். அந்தப் பேரக்குழந்தைக்கு கழட்டித்தாருங்கள் என்ற ஓரு தமிழ் வினைச்சொல் தெரிந்திருக்கின்றது. சிரிக்கவும் சுவைக்கவும் கூடியதான குழந்தைகளின் மழலைப் பேச்சுக்கள் ஏராளம் உண்டு. பேராசிரியர் à®….சண்முகதாஸ் அவர்கள் குழந்தைகளின் மழலைபற்றி ஆய்வு செய்திருக்கிறார் என்பதெல்லாம் கட்டுரையாளர் அறிந்திருக்க மாட்டார். ஆகக் குறைந்தது வள்ளுவனின் குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்ற குறளைத் தன்னும்  அவர் அறிந்திருந்தால் இப்படி எழுதியிருக்கார். அதனைவிட உலக அறிவிலும் கிணற்றுத் தவளைதான் (இராமாயணம் குட்டை என்பதால் குட்டைத் தவளை என்பதும் அவருக்கு பொருந்தலாம்) என்பதை கட்டுரை முழுவதிலும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இக் கட்டுரையைத் தொடந்து படிக்கையில் அதனைப் புரிந்து கொள்வீர்கள். அதற்கு முன் மழலைமொழி புரியாமல் ஜெயராஜ் கூறிய கதையில் சுவிசில் இருந்து வந்த அந்தக் குழந்தை பிளீஸ் அங்கிள் என்று ஆங்கிலம் பேசியதாம். சுவிசில் வழக்கில் உள்ள மூன்று மொழிகளில் ஆங்கிலம் உட்படவில்லை என்பதுடன் அக்குழந்தை சுவிசின் எந்தப் பகுதியில் வாழ்ந்ததோ அந்த மொழிச்சொற்களைத்தான் தமிழுடன் கலந்திருக்கும் அதுதான் இயல்பாக இருந்திருக்கும் என்பதோ அவருக்கு புரிந்திருக்காது. அந்தக் குழந்தையும் கதையும் கம்பவாரிதியினால் வம்புத்தனத்திற்காக காமரசத்திற்காக இட்டுக்கட்டியது என்றே துணிந்து கூறலாம்.
இவருடைய வம்புத்தனத்திற்கு மேலும் சிலவற்றை இங்கே எடுத்துக்காட்டலாம். அவரின் கூற்றுக்களைப் படியுங்கள்.
'கூலி வேலை செய்யும் இடத்தில் வெள்ளைக்கார எஐமான்களிடம் நல்ல பெயர் வாங்க தலைமயிரை மட்டுமன்றி கால்மயிரையும் மழித்துக் கொள்கின்றனர் நம்காரிகையர்"
'பதின்மூன்று வயதான பருவ எல்லையில் நிற்கும் உங்கள் பாலகியின் பட்டராலும் சீசாலும் கொழுத்துக் கிடக்கும் தொடையின் முக்கால் பாகம் தெரியும் காற்சட்டை போட்டாகிவிட்டதா?"
கம்பவாரிதியின் காமப்பார்வை மன்னிக்க வேண்டும் அருள்பார்வை எவ்விடங்களைத் துழாவுகின்றது, மேய்கின்றது என்று தெரிகின்றதல்லவா? இப்போது ஜெயராஜை நான் ஏன் வம்பவாரிசு என விளிக்க முனைந்தேன் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
ஜெயராஜின் கட்டுரையில் எள்ளல் மொழியில் இகழப்படும் விடயங்கள் என்னவென்றால் புலம்பெயாந்த தமிழர் மொழியை, பண்பாட்டை, மரபை மறந்து செல்கின்றனர் என்பதும், அவர்கள் போலியான பணப்பகட்டு காட்டுகிறார்கள் என்பதும்தான். 'சும்மா சொல்லக் கூடாதையா, அங்கிருந்து நீங்கள் ஆடின ஆட்டத்தில் இங்க எங்கட ஆணிவேரே ஆடிப்போனது உண்மையிலும் உண்மை" என்னும் அவருடைய கண்ணோட்டத்தில் நியாயம் இருக்கக்கூடும். ஆனால் அவரது சொல்லல் முறையும், பயன்படுத்திய மொழியும், தகவல் தரவுகளும், அவருடைய ஆலோசனைகளும் மிகவும் நயவஞ்ககமானது நஞ்சூட்டப்பட்டது. புலம்பெயர்ந்த சமூகம் பற்றிய ஆய்வுகளும் விமர்சனங்களும் சமூக ஆர்வலர்களால் ஆய்வாளர்களால் தொடர்ந்தும் இங்கே ஊடகங்களில் ஆரோக்கியமான முறையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. நோய்க்கு வைத்தியம் செய்ய மருத்துவ படிப்பு வேண்டும். அனுபவப் பயிற்சி வேண்டும். அதேபோல்தான் சமூக நோய்க்கு ஆலோசனை சொல்ல சமூகப் அக்கறை வேண்டும் அனுபவப் பயிற்சி வேண்டும். நோய்க்கூறு கொண்ட நோயாளியை மருத்துவர் இகழ்ச்சியுடன் அருவருப்புடன் அணுகமுடியாது. இது தொழில்சார் விழுமியம் சார்ந்தது. அறம் சார்ந்தது. கட்டுரையாளர் கம்பவாரிதிக்கு சமூகம், சமூகவியல் பற்றியோ வரலாறு பற்றியோ எதுவும் தெரிந்திருக்கவில்லை. அறமும் அவரிடமில்லை (இத்தனைககும் அவர் ஆத்மீகவாதியாம்?). அதனால்தான் தனது இராமாயணக் குட்டையின் எல்லைதாண்டி, வரம்புமீறி வம்பும் வக்கணையுமாக சொற்களை உதிர்க்க முடிந்திருக்கின்றது. சமூகத்தை எள்ளி நகையாட முடிந்திருக்கின்றது.மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 16 Jul 2024 02:14
TamilNet
HASH(0x55687f1a0710)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 16 Jul 2024 02:14


புதினம்
Tue, 16 Jul 2024 02:14
     இதுவரை:  25365518 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5901 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com