அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 02 April 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 14 arrow 2020ம் ஆண்டில் அரியகுட்டியர்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


2020ம் ஆண்டில் அரியகுட்டியர்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பிறேம்  
Saturday, 05 March 2005

லாசப்பல் தெருமூலையில் தன் ஆத்ம நண்பனான பேய்க்குட்டி யாரோடையோ 'பேய்க்கதை" கதைத்துக்கொண்டிருப்பதைக் கண்ட அரியகுட்டியருக்கு சத்தோசம் உச்சியிலடித்தது. 'எத்தனை நாளாச்சு அவனுடன் சேர்ந்து 'சுதிபானம்"அடிச்சு" என்பது அப்போது நினைவிற்கு வந்ததும் அவர் கண்ணில் சுதிஏக்கக் கண்ணீர் வேறு துளிர்த்துவிட்டது.
'அரியரும் நோக்க அவனும் நோக்கினான்! சுதிபானம் அடிப்பவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? சீட்டுக்க(ா)தை, வட்டிக்க(ா)தை, அலக்கேஷன் பமிலிக்காசு வெட்டுப்பட்ட சோகக்கதை, தரமான ஆட்டுக்குடல் வேண்டத் தகுந்த இடங்களின் கதை இப்படியாக அவர்களின் கதை காதைகளாக நீண்டுகொண்டு செல்லச் செல்ல போத்திலிலிருந்த சுதிபானம் குறைந்துகொண்டே சென்றது. 'ஒருவரின் ஏற்றத்தில் இன்னொருவருக்கு வீழ்ச்சி வருமென்பது எவ்வளவு உண்மையான தத்துவம். குடிமகன்களின் போத்தல் குறைய குறைய சுதி ஏறுவது இத் தத்துவத்தின் அடிப்படையில்தானே!
ஆ... இப்போது பார்த்தா அரியகுட்டியரின் பாழ்பட்ட செல்லிடப்பேசி அடித்துத் துலைக்கவேண்டும். செல்லாக் காசாக அச்செல்லிடப்பேசியை தூக்கி எறிய அவர்மனம் துடித்தாலும் மின்னிய இலக்கம் அவர் சப்தநாடிகளையும் (அவை எதுவோ யான் அறியேன்)
ஒடுங்க வைத்தது. அழைப்பு வருவது வீட்டிலிருந்தல்லவா. கண்களை உருட்டும் அம்மன் வேசத்தில் கே. ஆர். விஜயா சூலத்தைத் தூக்குவது போல செல்லிடப்பேசி திரையில் ஒரு காட்சிப் பிரமை. ஒரு சிறிய வித்தியாசம் என்னவென்றால் அரியகுட்டியரின் கண்களில் கே. ஆர். விஜயாவிற்குப் பதிலாக மனைவி மாருதப்புரவீக சுந்தரி.
மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ தெரியாது? ஆனால் அரிய குட்டியர் ஏழெட்டுத் தடவைகள் 'ஓம்'(கள்) போட்டுக்கொண்டார். பேய்குட்டிக்கோ 'இணைபிரிந்த அன்றில்கள்' போல வார்த்த கிளாசுகள் பிரியும்நேரம் வந்துவிட்டதென்பதும் விளங்கிவிட்டது. 'பரபரவென' மாரு சொன்ன சாமான்கள் எல்லாம் சரியாக வாங்கியிருக்கிறதா எனப் பார்த்தவர் அந்த வாரப் பத்திரிகையொன்றையும் வாங்கிக்கொண்டு ஸ்ரேசனுக்கு விரைந்தார்.
றெயின் ஓடிக்கொண்டிருந்தது. பொழுது போகவென பத்திரிகையை பிரித்துப் படிக்கத் தொடங்கினார். அடித்த 'பானத்தின்' சுதிமயக்கம் கண்களை வேறு இடுக்கத் தொடங்கியது. மெல்ல.. மெல்ல 2020 ஆண்டிற்குள் நுழைந்துவிட்டார் அரியகுட்டியர். கைகளில் அதே பத்திரிகை 2020 ஆண்டிற்குரிய செய்திகளோடு.

பீடா துப்பலை கட்டுப்படுத்த லாசப்பலில் ராடர்!
ஐரோப்பிய நாடுகளிலுள்ள தமிழ் மக்களின் கடைத் தெருக்களில் பெருகிவரும் வெற்றிலை எச்சில் வீச்சை கட்டுப்படுத்த ஐரோப்பிய ஆணைக்குழு கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது. இதன் பரீட்சார்த்த நடவடிக்கையாக பாரீஸ் லாச்சபலில் விசேட ராடர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ராடர்கள் பீடா, வெற்றிலை எச்சிலை 'பொழிச்' சென்று துப்புவோரை பளிச்சென படம்பிடித்துவிடும். பிடிக்கப்பட்ட படம் 24 மணிநேரத்தில் அவருடைய தரவுகள் சரிபார்க்கப்பட்டு அபராதத் தொகையுடன் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படுமெனவும் தெரியவருகிறது. இவ்வகை ராடர்கள் எச்சில் துப்பலுக்கு மட்டுமல்ல தெருவோரத்தில் வெற்று சப்பட்டைப் போத்தல்கள், யானை மார்க் சோடாப் போத்தல்கள் வைப்போரையும் படம் எடுக்கும் வசதி கொண்டனவெனவும் தெரியவருகிறது.
 
கனடாவிலிருந்து ஒசிலான்ட் சென்ற தமிழர்கள்
அகதி கோரிக்கை
ஒசிலான்ட் நாட்டில் சமூகக்கொடுப்பனவு உதவித் தொகை (சோசல் காசு) அதிகமாக கொடுப்பதாக கேள்வியுள்ள கனடாத் தமிழர்கள் சிலர் வாடகை விமானமொன்றில் ஒசிலான்ட் தலைநகரிற்கு சென்று அங்கு அகதி அந்தஸ்து உரிமை கோரியுள்ளனர்.
இவர்களில் சிலர் பல வருடங்களிற்கு முன்னர் மொஸ்கோவிலிருந்து சிலோவாக்கியா ஊடாக இத்தாலி வந்து பின்னர் பிரான்சில் அகதி அந்தஸ்து எடுத்து 5, 6 வருடம் இருந்து அதுவும் அடங்காமல் இலண்டனிற்கு சென்று அங்கும் இருக்கப் பிடிக்காமல் கனடாவிற்குச் சென்று அகதி அந்தஸ்துடன் இருந்தவர்கள் என்பதும் தெரியவருகிறது.
இவர்களின் கோரிக்கையைக் கேட்ட குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் 'உங்களுக்கென ஒரு சொந்த தேசம் உருவாகியுள்ளதால் நீங்கள் அகதி அந்தஸ்து கோரமுடியாது என தெரிவித்த போதிலும். இவர்களோ தாம் அதையெல்லாம் ஏற்க முடியாது, தமக்கு கட்டாயம் அகதி அந்தஸ்து தரவேண்டுமென அடம் பிடித்துள்ளனர். தமது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
 
முருகன் பிளேன் உலா திருவிழா
ஜேர்மனியிலுள்ள இரு கோவில்களுக்கு இடையிலான திருவிழாப்போட்டி இப்போது வானுயர வளர்ந்திருக்கிறது. மரான்போட் பிள்ளையார் கோயிலில் வருடா வருடம் தேர் திருவிழா செய்வதால் அதற்குப் போட்டியாக கிரான்போட் முருகன் கோயில் நிர்வாக சபை இவ்வருடம் முருகனை பிளேன் ஒன்றில் உலாவரச் செய்யப்போவதாக அறிவித்துள்ளதாம்.
முருகனின் வாகனமான மயிலுக்கும் பிளேனிற்கும் இடையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லாததால் பிளேன் உலாத்திருவிழா சாலப்பொருத்தமே, என தமிழகத்திலிருந்து வருகை தந்த காலாவதியான விஷாமின் 'ஜானக' அடித்திருக்கும் சோதிட நிபுணர் 'லெப்பே' நாராயணன் முருகன் கோவில் சார்பாக அறிவித்திருப்பதால் முருகன் வள்ளி தெய்வானை சகிதம் பிளேன் ஏறப்போவது நிச்சயமாகிவிட்டது.
வானில் முருகன் பறக்கவிருப்பதால் தெருவில் சிதறுதேங்காய்களை அடிக்க முடியாது என ஏங்கும் பக்கதர்களுக்காக பழைய பீரங்கிகள் சிலவற்றை வாடகைக்கு எடுத்து அதிலிருந்து தேங்காய்களை வான்நோக்கி சுட்டுத்தள்ளலாமா என்பது பற்றியும் ஆராயப்படுவதாக முருகன் கோவில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முருகன் கோவிலின் இந்த நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கையாக பிள்ளையார் கோவில் நிர்வாகம் என்ன செய்யப்போகின்றதென்பது இதுவரை தெரியவரவில்லை.

வட்டி நெளிவுகள்-சுழிவுகள் புத்தக வெளியீடு
வட்டிக்கு காசு கொடுப்போர் மற்றும் பெறுவோரின் சிக்கல்களை தீர்த்து வைக்கும் முகமாக சுவிசில் 'வட்டி நெளிவுகள்-சுழிவுகள்' என்ற புத்தகம் ஒன்று வெளியிடப்படவுள்ளதாக 'துப்ரோவின்ஸ்' பதிப்பகம் அறிவித்துள்ளது. இப்புத்தக விற்பனையிலிருந்து கணிசமானதொரு தொகை 'வட்டிக்கு காசு கொடுத்து நலிவடைந்தோர் அறக்கட்டளை'க்கு கொடுக்கப்படவுள்ளதாகவும் தெரியவுள்ளது.
இப்புத்தகத்தின் மீதான மதிப்புரையை புகலிட பிரபல வட்டியாளரான 'மீற்றர் வட்டி மித்திரன்' செய்வார் எனவும் பதிப்பகம் அறிவித்துள்ளது.
 
சமையலறை தூய்மை
இலண்டன் தமிழர்கள் சாதனை
வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு சாப்பாடு கொடுக்கப் பின்னடிப்பதில் இலண்டன் தமிழர்கள் தொடர்ந்தும் சாதனை படைத்து வருவது தெரிந்ததே. இந்நிலையில், இலண்டன் தமிழர்களில் பலர் தமது சமையறையை  பாவிப்பதில் சிக்கனம் காட்டுவதால் அவர்கள் சமையலறை தூய்மையில் முன்னணி வகிப்பதாக BBC செய்தி நிறுவனம் எடுத்த கணிப்புகளில் தெரியவருகிறது. சமையலறையை அவர்கள் பாவிக்காது போனாலும், பிறீசரில் வைக்கப்பட்ட சாப்பாடு, மற்றும் மைக்ரோ அவுன்களை அவர்கள் நன்றாகப் பாவிப்பதில் மற்றயை ஐரோப்பிய தமிழர்களை விட முன்னணியில் நிற்பதாகவும் அக்கணிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை தமில் கதைக்கும்போது அடிக்கடி ஆங்கில வார்த்தைகளை அவர்கள் பாவிப்பது சாதாரணமென்றாலும் ரெலிபோனில் 'ஹலோ' சொல்லும் போது மாத்திரம் ஏன் குரலை அவர்கள் 'ஒருவிதமாக' உச்சரிக்கின்றார்கள் என்பதற்கான காரணம் குறித்து இந்த கணிப்பில் எவ்வித முடிவுகளும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
18400 வது அங்கத்துடன் சட்டி ஒலி முடிவு
வருடக்கணக்காக இழு.. இழு.. என்று சவ்வு இழுவை இழுத்த மகாமெகாத்தொடரான சட்டி ஒலி கடந்தவாரம் தனது 18400வது அங்கத்துடன் முடிவடைந்தது. நாடகம் முடிவடைந்தபோதிலும் மூத்த அண்ணியின் தங்கைக்கும் இரண்டாவது அண்ணியின் தம்பிக்கும் இடையிலான காதல் கை கூடியதா என்பது காட்டப்படவில்லையாதலால் வெகுவிரைவில் அந்த இருவருக்குமிடையிலான கதையைக்கொண்டு சட்டிஒலி ஐஐ வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நாடகம் ஆரம்பிக்கும்போது 27 வயதில் நடிக்க வந்த ஸ்ருதிக்கு இப்போது 60 வயதானதால் அவரை தொடர்ந்தும் மருமகள் பாத்திரமாக மேக்கப்போட்டுக் காட்;ட முடியாத நிலையை அடுத்தே 18400 அங்கத்துடன் வேறுவழியின்றி அது நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந் நாடகம் முடிவடைந்தமை புகலிட ஈழத்தமிழர்களின் பல இல்லப்பாட்டிகளை கவலைகொள்ள வைத்துள்ளது.
 
மேலும் பேப்பரை நித்திரையில் வாசிக்கப் பிடிக்காமல் அரியகுட்டியர் கண்களை விழித்தார். சுற்றிலும் இருட்டாக இருந்தது. றெயின் வேறு ஓடவில்லை. சனம் இருப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை. பயம் அவரை கவ்வத் தொடங்கியது. வேறு வழியின்றி உதவிகோரி கத்தத் தொடங்கினார். கத்திய கத்தில் அடித்த 'சுதி" பறக்கத் தொடங்கியது. பாவம்! அவரியகுட்டியர் அந்த றெயினோ அன்றைய சேவையை முடித்து பாக்கிங் பகுதியில் அடிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் அவர் இறங்கவேண்டிய ஸ்ரேசன் தாண்டி நூறு கிலோ மீற்றர் தொலைவில். இப்படியான விபரங்கள் இனிமேல்தான் அவருக்குத் தெரியவரும். அதுமட்டுமல்ல றெயினை சுத்தப் படுத்தும் தொழிலாளர்கள் (அதில் ஒரு தமிழர் வந்தாலும் புண்ணியம்) வரும்வரை அரியகுட்டியர் இப்படிக் கத்துவதை தவிர வேறு வழியேதும் இல்லை.

நன்றி:ஈழமுரசு


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 02 Apr 2023 11:00
TamilNet
HASH(0x55a468e9dd40)
Sri Lanka: English version not available

Fatal error: Call to a member function read() on a non-object in /homepages/1/d40493321/htdocs/classes/rdf.class.php on line 1070