அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 02 April 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 14 arrow குப்பைகளோடு...
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குப்பைகளோடு...   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: -மெலிஞ்சி முத்தன்.  
Friday, 11 March 2005

பார்த்து சிரிக்கின்றது
பாரிஸ் நகரத்து குப்பைத்தொட்டி
அது இருக்கும் நாட்டில்
அகதி அந்தஸது கோரி
எழுதி, எழுதி
கிழித்து கசங்கிய
எனது சரிதக் காகிதங்கள் சுமந்து

பார்த்து சிரிக்கின்றது
பாரிஸ் நகரத்து குப்பைத்தொட்டி.

அழகான பொருட்கள்
அதன் வயிற்றில் இருந்தாலும்
அவைகள் குப்பைகளே
கசங்கிப் போனாலும்
காலம் என்னைப் பாவிப்பதால்
நான் குப்பையல்ல.

அநாவசியத்தின் கூட்டமாய்
ஆகிய எல்லாமே
'குப்பைகளே' - நான்
அநாவசியமல்ல-
அவசியம்.
எனக்குள்தான் சில அநாவசியங்கள்-
நாக்கு வளிப்பான்களால்
வார்த்தைகளை
வளித்தெறிய முடியாமை போலவே
அநாவசியக் குப்பைகளை - முழுதும்
அகற்றிவிட முடிவதில்லை.

குப்பைகளோடு வாழுதல்,
குப்பையாக வாழுதல்,
குப்பை கொட்டி வாழுதல் என்று
வாழ்க்கை நீள்கின்றது.
பூரணப்படாத எனது வரலாற்றின்
கிறுக்கு வரிகளைக் கிழித்து
நானும் குப்பை கொட்டுகிறேன்.

பார்த்து சிரிக்கின்றது
பாரிஸ் நகரத்து குப்பைத்தொட்டி.

கிழிந்து போன அந்தப் பக்கங்களில்
ஓலமிடுகின்றன - எனது நாட்டின்
ஊனக்குரல்கள்.

கண்ணீர் தெளித்து
கோலமிட்ட முற்றத்தில்
கருகிக் கிடந்த சடலங்களின்
கரையேறாத கனவுகளாய்.

பூச்சிக்கு மருந்து தெளித்த விவசாயி
புழுப்பிடித்து கிடக்கையில்
புதைக்க முடியாமல்
நகர்ந்த நாட்களின்
கையாலாகாத்தனங்களாய்-
வரிகளில் - வலிகளின் பிழிவுகள்.

அநாவசியங்களோடு சேர்ந்து
அவையும் கிழிந்து போயின.

'தாள்கள் - அநாவசியங்கள் ஆகலாம்
வரலாறுகள் - அவசியங்கள்
வரலாறுகள் அவசியங்கள்.'
 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 02 Apr 2023 08:59
TamilNet
HASH(0x56209e232dc0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sun, 02 Apr 2023 08:59


புதினம்
Sun, 02 Apr 2023 08:59
















     இதுவரை:  23482001 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1246 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com