அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 17 arrow பிரஞ்சுப் பெண்ணிய எழுத்தாளர்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பிரஞ்சுப் பெண்ணிய எழுத்தாளர்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வாசுதேவன்.  
Wednesday, 08 June 2005

I ask the support of no one, neither to kill someone for me, gather a bouquet, correct a proof, nor to go with me to the theater. I go there on my own, as a man, by choice; and when I want flowers, I go on foot, by myself, to the Alps.
George SAND.(1804-1876)


 
ஆண்போன்று உடையணிந்திருந்தார் அந்தப் பெண்மணி. அவர் ஆண்போன்றுதான் தனக்குப் பெயரும் சூடியிருந்தார். அவர் சுங்கானில் சுருட்டுப் புகைக்ககும் பாணி ஆண்களினதைப்போன்றது. எந்த ஆணினுடைய ஆதிக்கத்திற்கும் அவர் கட்டுப்பட்டதில்லை. சமூகத்தின் அடக்குமுறைக்கு பலியாகியவர்கள் பெண்கள் என்பதையுணர்ந்து, தானும் சுயாதீனமாகி மற்றைய பெண்களும் சுயாதீனமாகத் தம் இருத்தலை உறுதி செய்யவேண்டுமெனும் நோக்கில் தாராளமாகவே பெண்ணிய இலக்கியங்களை உருவாகினார் இப்பெண்மணி.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியப் பெண்களின் நிலை இன்று போல் இருக்கவில்லை. அடக்குதலுக்குட்பட்ட ஒவ்வொருவரும் தாமும் தம்முறைக்கு அடக்குமுறையைப் பிரயோகம் செய்வதற்கு அவரவர் மனைவியர் இருந்தனர் எனவும், ஒடுக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தால் ஒடுக்கப்படும் வர்க்கமாகப் பெண்கள் இருந்தனர் எனவும் கருதப்படும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் அரைவாசியில் பெண்ணியச் சிந்தனகளை முன்னெடுப்பது என்பது எத்தனையோ இடையூறுகள் நிறைந்ததும் துணிவுமிக்கதுமான சாதனையாகும். ஆணாதிக்கச் சமூகக் கருத்தாடல்களை சற்றும் மதிக்காது தன் வாழ்விலும் இலக்கியத்திலும் நிறைந்த மனிதாபிமானத்துடனும், தாராள மனப்பாங்குடனும் வாழ்ந்தார் இப்பெண்மணி.

ஒறோர் டியூப்பன் எனும் இயற்பெயர் கொண்ட, இந்தப் பெண் வேறுயாருமல்ல: பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய துணிவுமிக்க பிரஞ்சுப் பெண்ணிய எழுத்தாளரான 'ஜோர்ச் சான்ட்' தான்.

நெப்போலியன் தன்னைச் சக்கரவர்த்தியாகப் பிரகடனம் செய்த ஆண்டு (1804), ஒறோர் டியூப்பன் எனும் இயற்பெயர் கொண்ட ஜோர்ஜ் சான்ட் பாரிஸில் ஜனனம் கொண்டார். போலந்து ராஜ வம்சத்தைச் சேர்ந்த உயர்குடித் தந்தைக்கும், சாதாரண பெண்ணான தாய்க்கும் குழந்தையாகப் பிறந்தார் இந்த பிரஞ்சு இலக்கியத்தில் ஆழமான தடம்பதித்த பெண்ணெழுத்தாளர்.

இந்த ரோமான்ரிக் நூற்றாண்டில், சுய வாழ்வும்-இலக்கியப் படைப்புகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கலந்திருந்த வாழ்வைக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளி இந்த ஜோர்ச் சான்ட்.

நான்கு வயதாகையில், தந்தை விபத்தில் காலமாகியதை அடுத்து, சிறுமி ஓறோர் தந்தையின் தாயாரிடத்தில் 'நொஹோன்'; என்னுமிடத்திற்கு அனுப்பப்படுகிறார். அங்கு தந்தை வழிப்பாட்டியின் இதமான கவனிப்பில் அவர் இளமைக்காலம் கழிகின்றது. பாட்டியின் மறைவுக்குப் பின்னர் தந்தை வழிச் சொத்தாக அவர் பெறும் நொஹோனில் உள்ள, இளமைக்காலம் கழிந்த, அந்த இல்லம் அவரின் இலக்கிய வாழ்வின் தலைநகரமாக பரிணமித்தது.

ஜேரர்ச் சான்ட் இளவயதில் திருமணமாகியபோதும், கலியாணப் பந்தத்திலிருந்து விரைவில் விடுபட்டு பல காதலுறவுகளில் தன்னை ஈடுபடுத்தினார். ரோமான்ரிசத்தின் துடுக்குக் குழந்தை அல்பிரட் து மியூசே musset.php, உடனானதும், பிரபல இசைவாணர் பிரடறிக் ஷொப்பன் உடனானதுமான இவரின் காதலுறவுகள் இலக்கியப் பரிமாணம் கொண்டவை. சூறாவளி உணர்ச்சிப் போராட்டங்களில் முடிவுறும் இக்காதலுறவுகள் ஜேரர்ச் சான்ட் ன் தனித்துவத்தையும், சுயாதீனத் துணிவுகளையும் வெளிக்காட்டி நிற்பவை. சமுக விதிகளுக்குக் கட்டுப்படாது அசாதாரணத்துணிவுடன் பெண்ணடிமைத் தளைகளை மீறிய வாழ்க்கையை நடைமுறையில் வாழ்ந்து காட்டினார் இவ்வெழுத்தாளர்.

சமகால இலக்கியகர்த்தாக்களுடன் நெருக்கமான தொடர்புகளை அவர் பேணிவந்தார். அவரது இல்லம் பல்ஸாக், மெரிமே, லமெனே, ப்ளோபேர் போன்ற எழுத்தாளர்களை வரவேற்ற இலக்கியக் கூடமாகவிருந்தது.

ப்ளோபேர் உடன் ஜோரச் சான்ட் கொண்டிருந்த நட்புறவும், இவர்களுக்கிடையான கடிதத் தொடர்புகளும் சமகால இலக்கிய-அரசியலில் தோன்றிய கருத்தாடல்களின் மீதான எதிரொலிகளாகப் பதியப்பட்டுள்ளன. குடும்பவாழ்வும் அதில் பெண்ணிலையும், சமூக ஒப்பந்தங்களும் சம்பந்தப்பட்ட மிகச் சிறந்த யதார்த்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் 'மடம் போவாறி' எனப்படும்- இன்று கூட குறிப்பிட்டுப் பேசப்படும்- ப்ளோபேர் ன் நாவல் ஜேரர்ச் சான்ட் டினால் மிகவும் சாதகமான முறையில் விமர்சிக்கப்பட்டது.

கடின உழைப்பு இவரின் இலக்கிய-சமுகவாழ்வு வெற்றியின் ஒரு இரகசியம் என்பது சந்தேகத்திற்கிடமற்ற ஒன்று. "பொய்மைநிரம்பிய, இன்புணர்வெனும் மாயையிலிருந்து எனைத் தப்பியோட அனுமதியுங்கள்.கடின உழைப்பையும், களைப்பையும், உபாதையையும், உத்வேகத்தையும் எனக்கு வழங்குங்கள்" என்ற அவரின் கூற்று கடின உழைப்பை அவர் தெரிவு செய்ததற்கான காரணங்களை விளம்பி நிற்கின்றன.

சளைப்பற்ற இந்த எழுத்தாளி நூற்றுக்குமதிகமான நாவல்-குறுநாவல்களையும், இருபத்தைந்து நாடகங்களையும், கட்டுரைகளையும், சுயசரிதைகளையும் எழுதிக் குவித்தார். இவர் எழுதிய ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான கடிதங்கள், இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. இவர் எழுதிய கடிதங்களில் ஒன்று எழுபத்தியொரு பக்கங்களை அடைந்து மிக நீளமான கடிதம் என்ற புகழைப்பெற்றது.

நாட்டுப்புற விவசாயச் சமூக வாழ்க்கையை மையமாகக் கொண்டு, அதன் எளிமைக்குள்ளும், இனிமைக்குள்ளும் துன்பியற்சாயற் படிமங்களுடனும் விபரிக்கும் அவர் எழுதிய பல நாவல்களில் ஒன்றான, "François le champi" " எனும் நாவல் கட்டாயமாகப் படிக்கப்படவேண்டியது என்று தயக்கமின்றிக் கூறியவிடலாம்.

மற்றும், காதலுணர்வை வெளிப்படுத்தும்பல நாவல்களையும், சழுக ஒழுக்கவியல் சார்ந்த நாவல்களையும், வரலாற்று நாவல்களையும் கூட எழுதிய ஜேரர்ச் சான்ட் சோசலிசக் கருத்துகளை முதன்மைப்படுத்தும் நாவல்களையும் எழுதியுள்ளார்.

தனது இறுதிக்காலத்தில் குழந்தைகளுக்காகக் குட்டிக்கதைகள் பலவற்றையும் அவர் எழுதியுள்ளார்.

1848 ல் பிரான்ஸில் வெடித்தெழுந்த புரட்சியின் பொது ஜோர்ச் சான்ட் இப்புரட்சியின் முன்னோடிகளுடன் அண்மித்த தொடர்புகளைக் கொண்டிருந்தார். றூசோவின் சமூக-அரசியற் கோட்பாடுகளால் அதீதமாக ஈர்க்கப்பட்டு, தனது அரசியல் நிலைப்பாடுகளை முன்வைத்த இவர், குறிப்பாக, இடதுசாரிகளான லூயி ப்ளோங், அறாகோ, லெத்றியூ றோலன், பார்பயஸ் போன்றவர்களுடன் கொண்டிருந்த தொடர்பு எத்தனை தூரம் அவர் ஒடுக்கப்பட்ட அடிமட்ட மக்களின் பால் நேயம் கொண்டிருந்தார் என்பதைப் புலப்படுத்தும்.

ஜனநாயகத்தின் சார்பிலும், சோசலிசக் கருத்துகள் சார்பிலும் பிரச்சாரத்தை நேரடியாகவே மேற்கொள்ளும் நோக்கில் பத்திரிகையொன்றையும் ஸ்தாபித்து தனது போராட்டத்தைத் தொடரும் ஜோர்ச் சான்ட், "அடுத்து வரும் நூற்றாண்டு முடிவடைவதற்குள் பிரான்ஸ் கம்யூனிசத்தை அடைந்துவிடும்" எனக் கட்டியமும் கூறினார்.

இருபதாம் நூற்றாண்டின் பிரஞ்சுப் பெண்ணிய எழுத்தாளர் பலரின் முன்னோடியாக இன்றும் கருதப்படும் ஜோர்ச் சான்ட் பிறந்த இருநூறாவது வருட ஞாபகார்த்தக் கொண்டாட்டங்களும், பல கருத்தரங்குகளும் இவ்வருடம் பிரான்ஸின் பல பகுதிகளி;ல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதானது அவர் பற்றிய மீளாய்வுக்கும், அவர் கருத்துகள் மீதான மீள் ஒளியூட்டலுக்கும் வழிவகுக்குமென அக்கறையுள்ள இலக்கிய ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)
 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 19 Apr 2024 04:26
TamilNet
HASH(0x5573ad6509e0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 19 Apr 2024 04:35


புதினம்
Fri, 19 Apr 2024 04:35
















     இதுவரை:  24779299 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3106 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com