அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 23 September 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 17 arrow பூபாள இராகங்கள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பூபாள இராகங்கள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: என்.செல்வராஜா  
Thursday, 09 June 2005
பக்கம் 2 of 3

2.

இந்நிலையில் தாயகத்தின் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களும் தம்மளவில் தாயகத்தின் நினைவுகளை எம்மிடையே காத்திரமாக நிலைநிறுத்தி வைத்துள்ளன. தாம் கற்றுத் தேர்ந்து வந்த பாடசாலைகளை மறந்துவிடாது அதன் அபிவிருத்திக்கு இங்கிருந்து கொண்டு நிறுவனரீதியாக நிதி உதவிகள் வழங்கிவருவதில் பழைய மாணவர்கள் ஈடுபாடு கொண்டுள்ளனர். நிதிவளம் குன்றிய தமது பாடசாலைகளுக்கு அதன் பழைய மாணவர்கள் என்ற நிலையில் நிதி உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், போர்க்காலச் சூழலில் ஈழத்தின் கல்விவளம் அதலபாதாளத்தை நோக்கிச் சரிவதைத் தடுத்து நிறுத்துவதில் கணிசமான பங்கிளை ஆற்றியுள்ளார்கள். அதே வேளை பிரபல்யமானதும் ஏற்கெனவே நிதிவசதி மிக்கதுமான உயர்தர பாடசாலைகளுக்கு மேலும் பல வழிகளில் பணம் சென்றடையும் நிலையும் இதனால் ஏற்பட்டுள்ளது. தம் கிராமத்தில் இயங்கிய வித்தியாலயங்களின் பேரில் புலத்தில் பழைய மாணவர் சங்கங்கள் தாபிக்கப்பட்டு அந்தப் பாடசாலைக்கு உதவுவதுடன் சிறிய வட்டமொன்றில் அறிமுகமாகியிருந்த அந்தப் பாடசாலையின் பெயரை புலத்தின் நாடுகளெங்கும் உச்சரிக்க வைத்த பெருமையும் ஒருசில பழைய மாணவர் சங்கங்களுக்கு உண்டு.

இந்த வகையில் ஈழத்தின் வடமராட்சி மண்ணில் அமைதியழகுடன் விளங்கும் கொம்மந்தறை கம்பர்மலை வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினரின் பணி மகத்தானதென்றே கருதுகின்றேன். ஈழத்துக் கிராமங்களில் மூலை முடுக்குகளில் ஆரம்பப் பாடசாலைகள் அமைந்திருப்பது சாதாரண விடயம். பழைய மாணவர்கள் நகர மட்டத்திலுள்ள உயர்தர, உயர்வகுப்பு கல்லூரிகளை நினைவுகூரும் அளவிற்கு தாம் கற்ற ஆரம்பப் பாடசாலைகள் பற்றி அதனுடனான தொடர்பு விடுபட்ட நிலையில் புலத்திலிருந்து சிந்திப்பது அவர்கள் சிந்திப்பது குறைவாகவேயுள்ளது. அத்தகைய பாடசாலைகள் பற்றி எவரும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் யாழ். கம்பர் மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை என இருந்த ஒரு கிராமத்துப் பாடசாலையை வித்தியாலயத் தரத்திற்கு உயர்த்தி, கொம்மந்தறை என்ற சிற்றூரில் இத்தகையதொரு பாடசாலை உண்டென உலகத் தமிழர்களை உச்சரிக்க வைத்து விட்டபெருமை இந்தப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்திற்கே உரியதாகும். அதற்கு ஒருவழியில் வழிவகுத்தது ஆண்டுதோறும் நடைபெறும் "பூபாள ராகங்கள்" என்ற இவர்களது முத்தமிழ் விழா நிகழ்வு. கடந்த ஐந்தாண்டுகளாக இலண்டனில் கொம்மந்தறை கம்பர்மலை வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினரின் பூபாள ராகங்கள் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

1997ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி வடகிழக்குப் பிரதேசங்கள் போர் மேகங்களால் சூழப்பெற்று முழு நாடுமே யுத்தச் சூழலில் திண்டாடிக்கொண்டிருந்த வேளையில் கொம்மந்தறை கம்பர்மலை வித்தியாலயத்தின் மைதானத்திலே முதலாவது நிகழ்ச்சி "பூபாள ராகங்கள் 1997" அரங்கேறியிருந்தது. பழைய மாணவர் சங்கத்தின் சர்வதேச இணைப்பாளரான மகாலிங்கம் சுதாகரன் அவர்களால் "பூபாள ராகங்கள் 1997" ஒழுங்குசெய்யப்பட்டு வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டது.

தாம் கற்ற பாடசாலையின் அபிவிருத்திக்காக நிதி சேகரிப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டாலும், முத்தமிழுக்கு முதலிடம் கொடுக்கும் நிகழ்ச்சியாக பின்னாளில் இது லண்டனில் தலை நிமிர்ந்தது. நடனம், நாடகம், பட்டிமன்றம், மெல்லிசை போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் மனதைக் கவரும்வண்ணம் இந்நிகழ்வுகளில் இடம்பெற்றுவந்துள்ளன.

இலண்டனில் கொம்மந்தறை கம்பர்மலை வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினர் தாயகத்தில் இருந்து அங்கு தமிழ்ப்பணி செய்து வாழ்பவர்களை ஆண்டு தோறும் அழைத்துக் கௌரவிப்பதும் குறிப்பிடக்கூடிய அம்சமாகும்.மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 23 Sep 2023 20:16
TamilNet
HASH(0x5586bdae9378)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 23 Sep 2023 19:57


புதினம்
Sat, 23 Sep 2023 20:16
     இதுவரை:  24042265 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2090 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com