அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 23 September 2023

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow பிரெஞ் படைப்பாளிகள் arrow ஆந்த்ரே ஜீத் (1869-1951): ஒரு அறிமுகம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஆந்த்ரே ஜீத் (1869-1951): ஒரு அறிமுகம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: க.வாசுதேவன்  
Thursday, 16 June 2005
பக்கம் 3 of 3

உரோமங்கள் சாய்ந்த திசையில் வருடிவிட்டு ஒருமைக்குள்
அனைத்தையும் அடக்கிவிட எண்ணும் உலகில், ஒரு கவிஞன்
பன்மையின்மீது பாடிய வாழ்த்துப்பா.
வித்தியாசங்களுக்கு விழாவெடுக்கும் புதியபோக்கு. ஜீத்தின் கருத்துகள் சீருடை அணியாதவை. ஒருமைப்பட்ட தோற்றங்களுக்குள்ளே ஒளிந்திருக்கும் வித்தியாசங்களை
வெளியே இழுத்து வந்து வெளிச்சம் போட முயல்பவை.
சலிப்பும் வெறுமையும் கூடிய சராசரி வாழ்க்கை வாழ்ந்து பழக்கப்பட்டு, அதன் காரணமாகவே வாழ்க்கையை அபத்தமாகக் கருதிவிட்ட மனிதனுக்கு ஜீத் கூறுவதென்ன?ஏற்றுக்கொண்ட பெறுமானங்களை விட்டுவிடல். புதிய பெறுமானங்களை
உருவாக்கல்.
"அகத்தில் இருந்து அனைத்தையும் பெருக்கி அகற்றியபின்,
ஆரம்பமாவதோ புத்தம்புதிய தொடக்கம்,
சிரு~;டித்து நிரப்பவுள்ள ஆகாயவெளியின் முன்,
கன்னிநிலத்தில் நிர்வாணமாய் நிமிர்கிறேன்"
"புதிய ஆதாமாகிய நான்தான் இன்று அனைத்திற்கும் ஸ்நானம்
செய்து நாமமூட்டப் போகிறேன். இந்த நீரோடைதான் என்
தாகம், இந்தச் சோலை நிழல்தான் என் நித்திரை, இந்த நிர்வாணக்
குழந்தை என் பேரவா, பறவையின் பாட்டில் தொனிப்பது என் காதலின்
குரல், தேன்கூட்டின் தேனீக்களின் ரீங்காரம் என் இதயத்தின் ஓசை.
அசைந்து செல்லும் அடிவானமே, நீ என் எல்லையாக இரு.
சரிந்த சூரியக் கற்றைகளின் கீழ் விலகி விலகி இன்னமும் தூரச்
செல்.
தெளிவற்றுப் போ.
நீலமாகு."
"நத்தநாயல், பயணித்துக்கொண்டே அனைத்தையும் பார்.
வழியிலெங்கும் தரிக்காதே. தெய்வத்தையன்றி
நிரந்தரமானதொன்று இவ்வுலகில் ஏதுமில்லை"
என்று கூறிய ஜீத்,
அன்பு பாசங்களுக்குள் அகப்படும் மனிதன் எவ்வாறு
பலவீனப்படுத்தப்படுகிறான் என்பதைப் பல இடங்களில்
குறிப்பிடுகின்றார்.
அரைவாசி மானிடனாகவும், அரைவாசி தேவனாகவும் பிறந்த கிரேக்க
நாயகன் அ~pலின் தாய், அவனுக்கு அழியாவரம் கிடைப்பதற்காய்
அவனைப் புனித நீர்த்தடாகம் ஒன்றில் குதிக்காலில் பிடித்தபடி
முழுக்காட்டுகிறாள். அதனால் அவள் கை பிடித்திருந்த குதிக்கால்
பகுதி நனையாது அவ்விடத்தில் மட்டும் அ~pல் பலவீனமாகி அதுவே
அவனது அழிவிற்கும் காரணமாகிவிடுகிறது. புராணத்தின் ப+டகத்தைப்
புரியுமாறு அழைக்கிறார் ஜீத்.
"தாயவளின் பாசவிரல் பட்டுப் பலவீனப்பட்ட குதிக்காலிலன்றி,
வேறெங்கும் அ~pல் வெல்லற்கரியனாய் விளங்கினான் என்று
கூறுமந்தக் கதையே காண்"
"கனிந்துவிட்ட பழமே கிளையை விட்டுக் கழன்று போ. உன் தசையை
ஊட்டியபின் விதையே முளைத்து வா. ப+மிக்குள் புகுந்து உள்
உடையையிழந்து கிளர்ந்து வா. ப+மிக்கு மீண்டும் நிழல் வேண்டும்.
கடமையை முடிக்கக் கனியே உன் சுவையையிழந்து,
உன்னையிழந்து, இறந்து மீண்டும் பிற."
ஜீத்தின் தாவரவியல் அறிவும், இயற்கையின் மீதான அளவு கடந்த
நாட்டமும், தனிமனித விடுதலையினதும் அவனது தனிப்பட்ட
மறுமலர்ச்சியினதும் தேவையை ஒப்பீட்டுமுறையில் ஊர்ஜிதம்
செய்கின்றன.
"மயிர்க்கொட்டிக்கும் வண்ணத்துப்பூச்சிக்கும் இடையில்
நடைபெறும் ஜீவனமாற்றம் கூறுவதென்ன?
இரண்டும் வேறுவேறானவையல்ல.
இரண்டினதும் அடையாளம் ஒன்றேதான்.
ஆனால் வழக்கங்களும் வாழ்முறைகளும் மாறிவிடுகின்றன.
"உன்னையே நீயறிவாய்;"
எத்தனை அசிங்கமானதும், ஆபத்தானதுமான கோட்பாடு.
தன்னைப்பற்றியறிய மயிர்க்கொட்டி காலத்தைக் கழித்திருந்தால்,
அது வண்ணத்துப்ப+ச்சியாய் வரக் காலமிருந்திருக்காது."
மீண்டும் ஒரு மின்னல். ஜீத் என்ற மேகத்தில் நீட்சே என்னும்
மின்னல் கோடுகளுக்கு அளவில்லை. சோக்கிரட்டீஸின் அறவியலைத்
தகர்க்கும் வண்ணம் அதே உத்வேகம். மனிதனைப்
பலவீனப்படுத்தும் எல்லாவிதமான ஒழுக்கவிதிகளுக்குமான
உச்ச ஸ்தாயியிலான எதிர்க்குரல்.
பல்சாக், ஸ்தொன்டால், ப்ளோபேர், கோத்தியே போன்ற
செவ்விலக்கிய எழுத்தாளர்களை நிறைய விரும்பிப் படித்த ஜீத், ஜேர்மனிய எழுத்தாளர்களில் பெரிய அக்கறை காட்டியதற்கான ஆதாரங்கள் இல்லை.
இருப்பினும் நீட்சேயின் ஆரம்பக் குருவான n~hப்பனோவரின் "உலகமென்பது எனது உள விருப்பாகவும், பிரதிமையாகவும்" என்ற நூல் ஜீத்தின் சிந்தனை ஓட்டத்தில்
தாக்கங்களை ஏற்படுத்தியதென்பதை அவரே ஒத்துக் கொள்கின்றார்.
ஆயிரமாயிரம் துன்பங்களைக் கொணர்ந்து கண்முன் காட்டுபவர்கள்
எவ்வாறு மனிதனைப் பலவீனமாக்கி அவனைப் பயன்படுத்துகிறார்கள்
என்பதை அறிந்த ஜீத் தனது "புதிய ஊட்டங்களி" ன் இறுதியில்
கூறுகிறார்:
"துன்பமே உனைக் கண்டு நான் கலங்கேன்,
அலறல்களையும் விம்மல்களையும் தாண்டி எனக்குக்
கேட்பதுவோர் இனிய பாடல்,
என் மனம் போன போக்கில் நானே வரிகளை அமைக்கும் பாடல்,
இளகவெண்ணும் என் இதயத்தை இறுக வைக்கும் பாடல்,
தோழனே உன் பெயரால் நான் நிறைக்கும் அந்தப் பாடல்"
இதன் பின்னர் "நத்தநாயல்" என்ற பெயரை விடுத்துத் "தோழனே"
என்று அறைகூவுகிறார் ஜீத்.
"குனிந்த நெற்றிகளே, நிமிர்ந்து பாருங்கள்!
கல்லறைகளில் தரித்துவிட்ட பார்வைகளே, வெற்றுவானத்தைப்
பார்க்காது, ப+மியின் அடிவானத்தை நோக்குங்கள்.
தோழனே, புத்தெழில் நிரம்பி, உறுபலம் கொண்டு, உன் பாதங்கள்
பிணங்கள் நாறும் இடங்களைவிட்டு புதிய அடிவானத்தை நோக்கி
உன் எதிர்பார்ப்பை அழைத்துச் செல்லட்டும்,
நேற்றைகளின் நினைவுகள் உன்னை நிறுத்தாதிருக்கட்டும்,
நாளையை நோக்கி உந்தியெழு!
கவித்துவத்தைக் கனவினுள் தள்ளாதே.
அதை யதார்த்தத்தில் காண விழை"

"தணிக்கப்படாத தாகங்கள், தீர்க்கப்படபாத பசிகள், நடுக்கங்கள்,
காரணமற்ற காத்திருப்புகள், களைப்புகள், தூக்கமின்மைகள்....
இவையெவையும் உனக்கு வராதிருக்கட்டும்.
ஆ! தோழனே,
உன் கரங்களையும் உதடுகளையும் நோக்கிப் பழுத்த மரங்களைச்
சரிக்க விரும்புகிறேன். சுவர்களை நொருக்கி வீழ்த்துவதும், "தனியார்
உடமை, உள்ளே வராதீர்கள்" என்ற அறிவிப்புப் பலகையுடன் கூடிய
தடைகளைத் தகர்த்தெறிவதும்கூட எனது விருப்பங்களே,
உனது கடினமான உழைப்பிற்கான நிஜமான ஊதியத்தை எவ்வாறேனும்
பெற்றுவிடல் தோழனே!
அதை எவ்வாறேனும் பெற்றுவிடல்"
தான் கம்யூனிஸ்ட் அல்ல என்று கூறிய ஜீத்தின்
வார்த்தைகளே இவையும். தனியார் உடமைக்கெதிரான தாட்சண்யமற்ற
குரல். பாரதி இன்றிருந்தால்கூட, தனது எதுகை மோனையை மேலும்
செழுமைப்படுத்தி "தனியொருவனுக்குணவில்லையேல் தனியார்
உடமையைப் பகிர்ந்திடுவோம்"
எனப் பாடியிருப்பான் என்பதில்
சந்தேகமில்லை.
"திடங்கொண்டோன் நீயென்று உணரும்போது
சோகமின்றி இவ்வுலகத்தை விட்டகல்வேன்.
எடுத்துக்கொள் என் மகிழ்வுணர்வை,
ஆனந்த நிலையுற்று, அந்நிலையை அனைவர்க்கும் கொடு, உழை,
போராடு,
எதையும் உன்னால் மாற்ற முடியாதெனக் கருதாதே.
நான் நினைத்தால் அனைத்தும் நடக்குமென நம்பு.
ஒதுங்கிக் கொள்ளலை உன்னத அறிவு என்று ஒருபோதும் நம்பாதே.
அவ்வாறெனில், உன்னத அறிவைப்பற்றியேதும் அறிந்தவன் போல்
உளறாதே,
தோழனே,
நாயகர்களுக்காய் உன்னைத் தியாகம் செய்யாதே!"
தனது எண்பதாவது வயதிலும் "பிரஞ்சிளைஞன்" என ஜப்பானிய
மாணவர்களால் பட்டம் சூட்டப்பட்ட ஜீத்தின் படைப்புகளில் இருந்து பெறக்கூடிய செய்திகள் மட்டற்றவை.
தனிமனிதனை நசுக்கியெறியும் சமூக ஒப்பந்தங்களுக்கெதிரான யுத்தப்
பிரகடனம், ஒழுக்கவியல்ரீதியான வரையறைகள் கொண்டுள்ள அழுக்குகளை அகற்றி, தனிமனித விடுதலைக்கான வழி சமைத்தல் போன்ற தளங்களிலே ஜீத்தின்
படைப்புகள் பரிணமித்தன.
"உறுதியாகப் பிணைக்கப்படாத ப்ரொமெத்தேயஸ்" போன்ற நாவல்கள் ஆழமான தத்துவ விசாரணைகளைக் கொண்டுள்ளன. மானிட வாழ்நிலை, இருத்தல் நிலை என்பவை
முரண்பாடுகளாலானவை. இம் முரண்பாடுகளுக்குச் செயற்கை முலாம் ப+சி அவற்றையும் ஏதோவொரு கோட்பாட்டுரீதியில் நியாயப்படுத்தவது எத்தனை வெறுமையானதும் கேலிக்குரியதும் என்பதை ஜீத் தெளிவுற விளக்கியுள்ளார்.
போலி ஒழுக்கவிதிகளின் பெயரால் சுய இயல்பைச் சுட்டெரிக்கும் இழிநிலை, மனிதர்களுக்குத் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து வெகுண்டெழும் ஜீத், இவ்வாறான தண்டனைகளால் தானே பாதிக்கப்பட்டார் என்பதனை அவரின் சொந்த
வாழ்க்கை பற்றிய குறிப்புகளில் தாராளமாகவே குறிப்பிட்டுள்ளார்.
அறிவியல் மேம்பாட்டின் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டியவர்களுக்கு அடையாளப் பிரச்சனை என்பது ஒரு வெறுமையான விடயமே என்று கூறினார்ஜீத்.
தேசியவாதியான மொறிஸ் பரஸின் "வேரறுந்தவர்கள்" என்ற புத்தகம் வெளியானபோது அதற்கெதிரான விவாதங்களை முன்வைத்து நொர்மாந்தித் தாய்க்கும், உஸஸ் தந்தைக்கும் பாரிஸில் பிறந்த என்னை எங்கே வேரூன்றச் சொல்கிறீர்கள் திருவாளர் பரஸ்
அவர்களே? என்று எதிர்க்குரல் எழுப்பினார் ஜீத்.
பிரான்சின் கலைப் படைப்புகளின் மேன்மைபற்றி "தேசியவாதமும் இலக்கியமும்" என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் ஜீத்.
"கலைப் படைப்புகளின் மேன்மை நிலை பிரான்சுக்கு எங்கிருந்து
கிடைத்தது? கிரேக்கத்திலிருந்தும், இன்று தேசியவாதிகள் வெறுக்கும்
பல இனமக்களின் ஒன்றுகூடலிலுமிருந்தே. ஏனெனில் எமது மிகப் பெரிய
கலைஞர்கள், இக் கலப்பினால் உருவாகியவர்களும், இடம்
பெயர்ந்து வந்தவர்களுமே. அதாவது மாற்று நிலத்தில்
நாற்றிடப்பட்வர்கள்."
நிலப் பயிர்ச் செய்கைப் பண்பாட்டில், மாற்றுப் பயிர்ச் செய்கையை வரவேற்கும் அறிவுஜீவிகள், தமது அறிவை மழுங்கடிக்க வைக்கும் தேசியவாதத்தால், இயற்கை அளிக்கும் பாடத்தை வெறுத்தொதுக்கி, கலாச்சாரத்திலும் மாற்றுக் கலாச்சாரத்தை அனுமதித்துச் செழிப்படைய மறுப்பதுபற்றி ஜீத் நீண்ட விவாதத்தினையே
முன்வைத்தார்.
"என்னில் கொண்டுள்ள முரண்பட்ட பெறுமானங்களின்
முரண்பாடுகளைத் தணிப்பதற்காகவே நான் இலக்கியம் படைக்கத்
தள்ளப்பட்டேனோ என்று நான் அடிக்கடி எண்ணுவதுண்டு.
கலப்பினால் தோன்றுபவற்றில், வேறுபட்ட மூலகங்கள்
கூடியிருப்பதாலும், அவை தம்முள் வேற்றுமை தணிந்திருப்பதாலும்,
அவற்றிலிருந்தே மேன்மையான கலைகள் உருவாகக்கூடும்"
என்றும்
தனது இளமைக்கால வாழ்க்கையை விஸ்தரிக்கும் "விதையழிந்தால்..."
என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


பிரமாண்டமான ஒரு மலையிலிருந்து ஒரு சிறு கல்லையுடைத்தெடுத்துக்
கொண்டு வந்து காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். மலையைத்
தேடப்போக இதுவொரு சிறிய உந்துதலாக அமையுமெனில் அதுவே
போதுமானது.


-வாசுதேவன்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)
மேலும் சில...
அல்பிரட் து மியூசே
குயிஸ்தாவ் ப்ளோபேர்
எமில் ஸோலா
விக்டர் ஹியூகோ
சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்ல் போதலயர்.
பல்ஸாக் அல்லது நுண்விபரிப்பின் அறுதிப் பலம்.

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 23 Sep 2023 18:15
TamilNet
HASH(0x558f501a6bd8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 23 Sep 2023 17:56


புதினம்
Sat, 23 Sep 2023 18:15
     இதுவரை:  24042053 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1990 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com