அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 27 September 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 20 arrow நட்சத்திரங்களும் கோள்களும்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நட்சத்திரங்களும் கோள்களும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Wednesday, 21 September 2005

முப்பந்தைந்து வயதின்பின்
உண்மைக் கலைஞர் வாழ்வது அரிதென்பர்.
நாமறிந்தவர்களுள் பாரதி ஒருவனே
சிறந்த உதாரணம்.
உள்ளத்தில் உண்மையுண்டானால்
வாக்கினிலே ஒளியிருக்கும்
என்றவன் சொன்னான்.
 
சுயவொளி கொண்டவை எவையும்
நிரந்தரமாய் நிலைத்ததில்லை!
சுயத்தை அழித்து, ஒளியைக் கொடுத்து
பிறர்க்காக வாழ்ந்ததே பாரதியின் பாதை!
 
எல்லோருக்குமே இது வந்து வாய்ப்பதில்லை.
ஒரு இலட்சம் மனிதரில்
புத்தன், இயேசு, காந்தி போன்றோரால் மட்டுமே
மகாத்தமாவாக முடிகின்றது.
 
மற்றைய கலைஞர்கள்?
மாகாத்மாக்களின் ஒளியைப்
பிரதிபலிக்கும் வெறும் கோள்களா?
 
முப்பத்தைந்து வயதின் பின்னரும்
வாழ்கின்ற நானும் ஒரு கலைஞன்தான்.
இல்லையா? பரவாயில்லை!
நானோர் நட்சத்திரமல்லத்தான்,
அதற்கென்ன?
நான் வெறும் கல்லாகவே
இருந்துவிட்டுப் போகின்றேன்!
 
ஒளியைப் பிரதிபலிப்பதும்
ஒளியை அளிக்கும் செயல்தானே?
இரவல் என்றாலும் அது
இருளை அகற்றும்
என்பது உண்மையல்லவா?
 
 

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 27 Sep 2023 09:37
TamilNet
HASH(0x5577d17d3080)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 27 Sep 2023 09:29


புதினம்
Wed, 27 Sep 2023 09:37
















     இதுவரை:  24049513 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2470 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com