அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 02 April 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 28 arrow குழந்தை கொல்லி.
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குழந்தை கொல்லி.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: க.வாசுதேவன்  
Monday, 21 August 2006

கவச வாகனத்தின் உள்ளமர்ந்து
கையில் புனிதப் புத்தகமேந்தி
கருணைமிக்க தன் கடவுளை
வேண்டினார் மதகுரு.

அந்நிய எல்லைக்குள் நுழைந்து
எதிரிகளை அழிப்பதற்கு
தம்மக்களுக்கு வரம்வேண்டி
அவர் மன்றாடிக்கொண்டிருந்தார்.

தென்லெபனானை விட்டு
வசதியும்வாகனங்களும் உள்ளவர்கள்
தப்பியோடி வடக்கை அடைந்தாரகள்.
மற்றவர்கள் நிலவறைகளில் பதுங்கி
இறைவழிபாட்டில் ஈடுபட்டார்கள்.

சர்வவல்லமையும் எல்லையிலாக்
கருணையும்கொண்ட இறைவன் உறையும்
வானிலிருந்து தென்லெபனான் நகரொன்றில்
வீழ்ந்தது  பல தொன்கள் சுமைகொண்ட
வெடிகுண்டு.

வறுமையில் வற்றிய தாய்களின்
முலைகளில் உறுஞ்சுவதற்குக்
குருதியும் அற்றிருந்த
குழந்தைகளைச் சிதைத்துப் பிளந்தது
வந்து விழுந்த வான்குண்டு.

ஏபிரகாம். ஏபிரகாம்.
பொய்யர்களிலெல்லாம் பொய்யனே,
கடவுளை நீ கண்டதுமில்லை.
கடவுளிடம் நீ கதைத்ததுமில்லை.

சொந்தக் குழந்தையை இரக்கமின்றிப்
பாலைவனத்தில் கலைத்துவிட்டவனே,
மற்றவர்களின் குழந்தைகளில்
நீ ஏன் அக்கறைப்படப்போகிறாய்,

எந்தக் குழந்தையையும் பலிகொடேன்
என எல்லையற்ற கருணைமிக்க உன் கடவுளிடம்
பதிலளிக்காதவன் நீ.

உன் அரசில் எந்தக் குழந்தையும்
காப்பாற்றப்படவில்லை.

ஏபிரகாம்,
நீ ஒரு பொய்யன்.
நீ ஒரு குழந்தை கொல்லி.

03.08.2006.


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 02 Apr 2023 09:59
TamilNet
HASH(0x56523db3e3a0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sun, 02 Apr 2023 09:59


புதினம்
Sun, 02 Apr 2023 09:59
















     இதுவரை:  23482161 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1383 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com