அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 02 April 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 30 arrow என் நினைவுகளும் என் இரவுகளும்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


என் நினைவுகளும் என் இரவுகளும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஏ.ஜோய்  
Monday, 04 December 2006

மண் வாசம் கிளர்த்தி
நாசியை அடைக்கும் வரைக்கும்
பொழிகின்றது மழை...

ஈரம் சொட்டச் சொட்ட
குளித்த மரங்களின்
இலைக் கூந்தலை
உலர்த்திச் செல்கின்றது
காற்று....

கரைந்து கரைந்து
காலையை விடியச் செய்கின்றது
காகம்...

ஒளிச் சிறகுகள் அலைந்து அலைந்து
அகல விரித்துப் பறக்க
உஷ்ணம் தலைக்கேறுகிறது...

சூட்டின் தகிப்புத் தாங்காது
கால்கள் குளிர்ச்சி தேடி
தரித்து நிற்கும் குடைமரங்கள்...

சத்தமின்றி திறக்கும
கதவின் இடுக்கு வழியே
அனுமதி இன்றி நுழையும் வெளிச்சம்போல்
கரைகிறது பகல்...

இருளின் மனைக்குள்
வெளிச்சம் நிழல் கொள்ள
துயில் கலைகிறது இரவு...

பூவில் தேங்கிய மழைத்துளி
வழிந்து வடிந்து விழ
திடுக்கிட்டு பயங்கொள்ளும்
மென் இலைபோல்
என் நினைவுகளும் என் இரவுகளும்...
06-11-06


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 02 Apr 2023 09:59
TamilNet
HASH(0x56523db3e3a0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sun, 02 Apr 2023 09:59


புதினம்
Sun, 02 Apr 2023 09:59
















     இதுவரை:  23482028 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1268 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com