அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 23 September 2023

arrowமுகப்பு arrow செய்திகள் arrow எட்டுத்திக்கும் arrow துபாய் கவிதைத் திருவிழா
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


துபாய் கவிதைத் திருவிழா   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: இசாக்  
Saturday, 30 June 2007

அமீரகத்தில் பெருக்கெடுத்து ஓடும் இலக்கிய ஆறு இலக்கிய சிந்தனையாளர்களையும் வாசகர்களையும் கட்டிபோட்டுவிட்டதை தொடர்ந்து துபாயில் பணிபுரியும் கடைநிலை தொழிலாளர்களையும் ரசிக்க வைத்திருப்பதைக் கண்கூடாக பார்த்தது மட்டுமல்லாமல் இதயப்பூர்வமாக உள் வாங்கவும் முடிந்தது...

ஆம் அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை கூட்டிய கவிதைத் திருவிழா முழுமையான இலக்கியத் திருவிழாவாக புலம் பெயர்ந்து இலக்கியம் பேசும் கவிதை பேசும் மக்களிடையே நிறைவை தந்திருக்கிறது. சுமார் மூன்று மணிநேர இலக்கிய விழாவில் கலந்துகொண்ட அனைவரும் தமிழ்ச் சுவையில் கட்டுப்பட்டு அரங்கத்தில் பேச்சாளர்களின் பேச்சுகளில் ஒன்றர கலந்துவிட்டிருந்தனர்.

அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை 15-06-2007 அன்று துபாய் இந்திய தூதரக அரங்கத்தில் கவிதைத் திருவிழாவினை கவிதை மத்தாப்பு கொளுத்தி துவங்கிய விதமே சிறப்பெனலாம். விழாவிற்கு அமீரகத் தமிழ்க் கவிஞர்கள் பேரவை தலைவர் தமிழ்த்திரு. எம்.ஏ.அப்துல் கதீம் தலைமையேற்று தலைமை உரை நிகழ்த்த விழா ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்திரு பாரத் அனைவரையும் வரவேற்று பேசினார்.

 

கவிஞர் திரு. மு.மேத்தா அவர்கள் தனது ஆகாயத்துக்கு அடுத்த வீடு கவிதை நூலுக்காக சாகித்ய அகடாமி விருதுபெற்றதை பாராட்டும் விதமாக அவரை அன்போடு அழைத்த கவிப்பேரன்களின் அன்பழைப்பையேற்று புதுக்கவிதைத்தாத்தா மு.மேத்தா அவர்களும். சிறப்பு விருந்தினர்களாக சென்னை அம்பத்தூர் சோக இகதா மகளிர் கல்லூரி நிர்வாகி திரு. சேது குமணன் மராட்டிய மாநில எழுத்தாளர் மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. சு. குமணராசன் சென்னை புதுக்கல்லூரி தமிழ் ஆய்வுத்துறை தலைவர் திரு. கம்பம். சாகுல் ஹமீது துபாய் இ.டி.எ.குழுமத்தின் இயக்குனர் திரு. செய்யது சலாஹ_ த்தீன் உள்ளிட்ட சானறோர்களும் அமீரகத்தில் உள்ள தமிம் இயக்கங்களின் பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

திருவிழாவில் கவியரங்கை திரு.கே.ஹபீப் தொகுத்தளிக்க. கவியரங்கில் திரு. சம்சுத்தீன் திரு. காளிதாஸ் திருமதி. ஜஸீலா ரியாஜ் திரு. கவிமதி திரு. பூபாலகன் உள்ளிட்ட கவிஞர்கள் கவிதைச் சொன்னார்கள்.

திருமதி. ஜஸீலா ரியாஜ் சொன்ன கவிதை தன்னை ஈர்த்துவிட்டதாகவும் அவருக்கு தன் கல்லூரியின் சார்பில் கவிஞர். மு. மேத்தா விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் தருவதாக திரு. சேது குமணன் அவர்கள் உறுதியளித்து பேசினார் . தனக்கு கிடைக்கப்போகும் பரிசு தொகையினை அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவைக்கே வழங்கப் போவதாக திருமதி ஜஸீலா உறுதியளித்து தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியதோடு அல்லாமல் கவிஞர் பேரவைக்கும் பெருமையும் சேர்த்தார்.

பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சே.ரெ.பட்டணம் அ. மணி கவிஞர் மேத்தா பற்றியும் . திரு. ஆசிப் மீரான் சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிச்சித்தர் மு. மேத்தாவின் ஆகாயத்துக்கு அடுத்த வீடு நூலை பற்றியும் பேசினர்.

மேலும் விழாவில் மும்பையில் வசிக்கும் கவிஞர் வெற்றிவேந்தனின் ' விடுதலை வேட்கை' நூலைப் பற்றி பேரவை செயலாளர் இ.இசாக் அறிமுகம் செய்தபின் மு. மேத்தா நூலை வெளியிட  திரு சேது குமணன் அவர்களும் சலாகுத்தீன் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.

கவிதைத்திருவிழாவின் இறுதி நிகழ்வாக கவிஞர். மு. மேத்தா அவர்களுக்கு " கவிச்சித்தர்" என்ற அடைமொழியையும் திரு. சேது குமணன் திரு. சு. குமணராசன் ஆகியோருக்கு " தமிழ் நேயர்" என்ற அடைமொழியையும் கவிஞர் பேரவை செயலாளர் திரு இ. இசாக் அறிவிப்பு செய்ய பேரவை தலைவர் அப்துல் கதீம் கேடயம் வழங்க சிறப்பு விருந்தினர்களை அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை சிறப்புச் செய்தது.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் உரையாற்ற இறுதியாக கவிச்சித்தர் மு.மேத்தா அவர்கள் ஏற்புரையில் தனக்கு இவ்விழா மிகவும் மகிழ்வுடையதாகவும் இன்னும் உற்சாகத்தை தருவதாகவும் கூறி மகிழ்ந்தார்.

கவிதைத் திருவிழாவினை முழுவதும் திரு. கவிமதி தொகுத்து வழங்க திரு. ந. தமிழன்பு நன்றியுரையாற்ற திருவிழா   நிறைவடைந்தது.

 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 23 Sep 2023 19:16
TamilNet
HASH(0x56493bb01928)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 23 Sep 2023 18:57


புதினம்
Sat, 23 Sep 2023 19:16
















     இதுவரை:  24042180 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2045 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com