அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 04 October 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நாள்காட்டி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஏ.ஜோய்  
Thursday, 06 December 2007

தூங்கி விழித்த முகத்தில்
இன்னமும் தூக்கம் எஞ்சியிருக்க
முந்தாநாள் துண்டு துண்டாய் வெட்டி
கடலில் வீசப்பட்ட ஆணின் உறுப்புகள்
என் முன்னால்
அலைந்து திரிவதாய் பிரமை..

பல்துலக்கி முகம் கழுவி
கண்ணாடி பார்க்கையில்
தகாத உறவு வைத்ததாய்
கணவனால் நேற்று கொலை செய்யபட்ட
பெண்ணின் உருவம்
கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தது.

அணிந்த ஆடைக்கு பொருத்தமாய்
காலுறைகளை மாட்டி
சப்பாத்தின் நூல்களை கட்டுகிறேன்.
ஆவி பறக்க பறக்க
மனைவி தயாரித்த தேநீரை
அருந்திக்கொண்டு
தொலைக்காட்சி பார்க்கிறேன்.

தொலைக்காட்சியில்
ஒரு வாரத்திற்கு முன்
கொலை செய்யப்பட்ட
சிறுமியின் உருவம் அழுகிய நிலையில்..
சிறுமியின் கண்கள்
என் கண்களை உற்று நோக்குகின்றது.
என்னால் என்ன செய்ய முடியும்
அவளுக்காக அஞ்சலி செலுத்திவிட்டு
வேலைக்கு செல்வதைத் தவிர...
15-10-2007


     இதுவரை:  25782647 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 7795 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com