அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 11 March 2026

arrowமுகப்பு arrow செய்திகள் arrow யாவரும் அறிவது arrow ‘இயல் விருது’ 2007 அறிவிப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


‘இயல் விருது’ 2007 அறிவிப்பு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….செல்வம்  
Monday, 24 December 2007

திருமதி. லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம்; 2007ம் ஆண்டிற்கான ‘இயல் விருது’ பெறுகின்றார்.

லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம்

 

 

 

 

 

 

 

 

 

2001ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் இயல்விருது வழங்கப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. இதுவரை ‘இயல் விருது’ பெற்ற வாழ்நாள் சாதனையளர்கள்: சுந்தர ராமசாமி, கே. கணேஷ், வெங்கட் சாமிநாதன், இ. பத்மநாப ஐயர், ஜோர்ஜ் ஹார்ட், ஏ. சீ. தாஸிசியஸ்.
2007ம் ஆண்டிற்கான இயல் விருதுக்கு மொழிபெயர்ப்பாளர் திருமதி. லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் தெரிவாகியுள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன தமிழ்ப் புனைகதைகள், கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து வெளியிட்டு, தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வருபவர் திருமதி. லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம்;. மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந. முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் போன்றவர்களின் பதினைந்து படைப்புக்களை மொழிபெயர்த்து, உலக அரங்கில் நவீன தமிழின் வளத்தை அறியச் செய்துள்ளார். தமிழக, ஈழத்துக் கவிஞர்கள் பலரின் தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பொன்றும் அவரது உழைப்பின் பயனாக பெங்குவின் பதிப்பகம் மூலம் விரைவில் வெளிவர உள்ளது. இதுபோலவே, சுந்தர ராமசாமியின் 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்' நாவலையும் லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளார்.

இங்கிலாந்து, கனடா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மொழி பெயர்ப்புப் பட்டறைகளை நடாத்தித் தமிழ் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்வதற்குப் புதியவர்களை ஊக்குவிப்தில் பெரும் பங்காற்றி வருபவர். தமிழ்க் கவிதைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும், லண்டனிலும் பிற இடங்களிலும், தமிழரல்லாதவர்கள் மத்தியில் வாசித்துக் காட்டி, தமிழ்க் கவிதைக்குச் சிறப்புச் சேர்ப்பவர். கனடாவில் வெளியான ஈழத்துத் தமிழ்க் கவிதை, புனைகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பான 'Lutesong and Lament' இல் இவர் மொழிபெயர்த்த கவிதைகள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பழந்தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காவியங்களையும் வசனநடையில் ஆங்கிலத்தில் ஆக்கி வழங்கியிருப்பமை இவரது மொழிபெயர்ப்புப் பணியின் மற்றுமொரு பரிமாணமாகும். நவீன தமிழ் இலக்கியங்கள் பற்றியும் பல கட்டுரைகளை ஆங்கில இதழ்களில் எழுதியுள்ளார்.

பாமாவின் கருக்கு, அம்பையின் காட்டில் ஒரு மான் ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக Hutch Crossword Book Award இனை (இது இந்தியாவின் Booker Prize  எனக் கருதப்படுவது) முறையே 2000, 2006ஆம் ஆண்டுகளில் பெற்றவர்.

தமிழுக்கு அவர் ஆற்றிய, ஆற்றிவரும் வாழ்நாள் பங்களிப்பிற்காக, கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம், அவருக்கு 2007ஆம் ஆண்டுக்கான இயல் விருதையும் 1,500 டொலர் பரிசையும் வழங்கிக் கௌரவிக்கின்றது. அவருக்கு எம் வாழ்த்துக்கள்.

விருது வழங்கும் விழா வழமைபோல் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் 2008ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறுகின்றது.

இம்முறை விருதுக்கான தெரிவுக் குழுவில் பங்காற்றியவர்கள்: பேராசிரியர் எம். ஏ. நுஃமான், பேராசிரியர் ஆ. இரா. வெங்கடாசலபதி, கவிஞரும் எழுத்தாளருமான மு. பொன்னம்பலம், பதிவுகள் இணையத்தள ஆசிரியர் வ. ந. கிரிதரன் ஆகியோர். 
       


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 11 Mar 2026 14:18
TamilNet
Intensifying rivalries between major powers are reshaping global geopolitics and elevating the strategic importance of the Indian Ocean. As the unipolar dominance of the United States faces increasing challenges from Russia and China, emerging fractures within the Western alliance system and expanding military confrontations across several regions are drawing renewed attention to the island of Sri Lanka. Situated at a critical maritime crossroads, the island is becoming increasingly significant within the evolving strategic calculations of competing global powers.
Sri Lanka: Multipolar rivalries elevate Indian Ocean geopolitics


BBC: உலகச் செய்திகள்
Wed, 11 Mar 2026 14:18


புதினம்
Wed, 11 Mar 2026 14:18
















     இதுவரை:  28380771 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2221 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com