அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 23 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 5 arrow கலகச் சுழல்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கலகச் சுழல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தா.பாலகணேசன்  
Monday, 14 July 2003


கருஞ் சக்கரங்கள் ஒவ்வொன்றும்
சிறை தகர்த்த மனித வாழ்வின்
குறியீடெனச் - சுழன்றன.

கவிதைகளின் சுழல் மையங்களெனக்
கனமேறின

காலச் சக்கர உடைவாய்
உடைந்து எறியுண்டு, சிதறுண்ட
கறுத்த சிறிய சக்கரங்கள் ஒவ்வொன்றும்
ஒளித் தரிசன உந்தலின் விளைவாயின @

உந்தி உந்திப் பயணித்த
சக்கரங்கள் ஒன்றைப் பற்றி ஒன்றாய்
இணைந்த ஓட்டக் கலகச் சுழற்சியில்
சுழன்று சுழன்று உரமேறின

வர்ணங்களில் தோய்ந்த வெளியில்
தூரிகையின் வீச்சும்
நடனமும் நிகழ்ந்தன

நாளைச் சாகா வாழ்வின்
அற்புதக் கனவுகள்
காட்சிப் புலங்களில் ஒளிகாலித்தன

உண்மையைத் தேடும்
விடுதலைக் கலகம்
வர்ணங்களிலும் பட்டயம் உருவியாயிற்று

கலகச் சுழலின் வெளி உயிர்க்கும்

09.08.2001


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 23 Apr 2024 11:37
TamilNet
HASH(0x5592357dbab8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 23 Apr 2024 11:37


புதினம்
Tue, 23 Apr 2024 11:37
















     இதுவரை:  24796518 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2789 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com