அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 04 October 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 22 arrow ஒரு நாள் ஒரு கனவு…
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஒரு நாள் ஒரு கனவு…   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: எ.ஜோய்  
Saturday, 05 November 2005

கதவின் இடுக்கின் வழியே
அனுமதி இன்றி
உள் நுழைந்த
இரகசியக் கதிரொளி
என் கனவை
களவாடிச் சென்றது …

என் அஸ்தி கரைத்த
கடலின் பாதையில்
முன்னும் பின்னுமாக
சில ஆத்மாக்கள்
மிதந்து கொண்டிருந்தன …

ஆத்மாக்களின் உலகுக்கு
நான் இழுத்துச் செல்லப்படுகிறேன்
விசாரணைக்காக …

இம்மை வாழ்வின்
பாவ புண்ணியங்கள்
மறுமையில் நடுத்தீர்க்கப்படுகிறது …

தீர்ப்புக்காய் காத்திருந்த வேளை
அறிந்து கொண்டேன்
பாவங்கள் அதிகமானால்
மீண்டும் பூலோகம்
அனுப்பப்படுவதாய் …

ஆத்மாக்களின் நரகம்
பூலோகமானால்
நாங்களெல்லாம் ?…

எனக்கான தீர்ப்புக்காய்
மணி ஒலிக்கிறது
கண் விழித்துப் பார்க்கிறேன்
அலாரம் அடித்துக் கொண்டிருந்தது
அவசர அவசரமாக
புறப்பட்டு
வேலைக்குச் செல்கிறேன்
வழமை போல …

12-10-2005


மேலும் சில...
பிரெஞ்சு தீவு
கலாயோகி ஆனந்த குமாரசாமி
நிர்வாண விழிகள்
வள அறிஞராக ஜீவா..
இடுக்குகளின் வழியே...
அம்மா எனக்கொரு சிநேகிதி.

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 04 Oct 2023 01:57


BBC: உலகச் செய்திகள்
Wed, 04 Oct 2023 02:09


புதினம்
Wed, 04 Oct 2023 01:57
















     இதுவரை:  24073062 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3839 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com