அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow குமாரபுரம் arrow வணக்கம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வணக்கம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Monday, 23 October 2006

அப்பால் தமிழ் வாசகர்களுக்கு எனது நன்றியும், வணக்கமும் உரித்தாகுக.

பிறந்த மண்ணில் அனர்த்தங்கள் அதிகரித்துள்ள இந்த வேளையில் தங்களுடன் மீண்டும் ஒரு கதையுடன் வருகின்றேன்.

நண்பர் கி.பி. அரவிந்தனுடைய அன்பான வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த ஏற்பாடு.

எனது இரு நாவல்களைப் படித்துள்ள அப்பால் தமிழ் வாசக அன்பர்கள், எனது நாவல்கள் அன்றைய காலகட்டத்தையும், அன்றைய வன்னி மக்களையுமிட்டுச் சில விஷயங்களை எனது அனுபவம், பார்வை, திறமை என்ற மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளுக்குள் நின்று சொல்வதை அவதானித்திருப்பார்கள்.

குமாரபுரம் நாவலும் இதற்கு விதிவிலக்கல்ல.

இன்றைய வன்னியையும், அங்கு வாழ் மக்களையும் எண்ணுகையில் இதயம் கலங்குகின்றது. அங்கு மட்டுமா? ஈழம் முழுவதுமே இப்போது வேதனை வாழும் பூமியாகிவிட்டது.

கற்பனையிலும் வராத சில சம்பவங்கள் அங்கு யதார்த்தங்களாக உள்ளன.

எனினும், இதற்குள்ளும் வாழ்வு தொடரவே செய்கின்றது.

இந்நிலையிலும் நான் உங்களை வன்னி மண்ணின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள 'அன்றைய' குமாரபுரத்திற்கு அழைத்து செல்ல ஆசைப்படுகின்றேன்.

இந்த நாவல் வெளி வந்ததுமே, அந்நாட்களில் அடிக்கடி இலங்கை வானொலியில் ஒலிக்கும் பெயரைக் கொண்ட 'மன்னார் அடம்பன் சகோதரிகள்" எனக்கு எழுதியிருந்த கடிதத்தில், மிகவும் நொடித்த நிலையில் இருந்த தங்கள் குடும்பம், பெண்களாகிய தங்களின் கடும் உழைப்பில் உயர் நிலையை அடைவதற்கு குமாரபுரம் நாவலின் கதாநாயகி சித்திரா ஒரு ஊக்க சக்தியாக இருந்தமைக்கு எனக்கு நன்றி கூறியிருந்தனர்.

ஓரு படைப்பாளிக்குக் கிடைக்கக்கூடிய அதி மதிப்பு வாய்ந்த பாராட்டாகவே நான் இதை உணர்ந்தேன்.

இப்போது அந்த அடம்பன் சகோதரிகள் எங்கு இருக்கின்றனர், எப்படியிருக்கின்றனர் என்பது எனக்குத் தெரியாது. ஆயினும் அவர்களுடைய வார்த்தைகள் எனக்குப் பல சமயங்களில் ஊக்கத்தையளித்து எழுத வைத்துள்ளன. அவர்கள் இருவரா அல்லது மூவரா என்பதுகூட எனக்குத் தெரியாது! அவாகளுக்கு எனது நன்றிகளை இங்கு தெரிவிக்க ஆசைப்படுகின்றேன்.
என்னை எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்தி வளர்த்த வீரகேசரி தாபனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு இந்த நாவலை உங்கள் முன் வைக்கின்றேன்.

பணிவன்புடன்
நிலக்கிளி அ. பாலமனோகரன்


மேலும் சில...
முதல்பதிப்பு
குமாரபுரம் - 01
குமாரபுரம் - 02
குமாரபுரம் - 03
குமாரபுரம் - 04
குமாரபுரம் - 05
குமாரபுரம் - 06
குமாரபுரம் - 07
குமாரபுரம் - 08
குமாரபுரம் - 09
குமாரபுரம் - 10
குமாரபுரம் - 11-12
குமாரபுரம் - 13
குமாரபுரம் - 14-15
குமாரபுரம் - 16, 17, 18
குமாரபுரம் - 19
குமாரபுரம் - 20
குமாரபுரம் - 21 - 22
குமாரபுரம் - 23 - 24
குமாரபுரம் 25 - 26
குமாரபுரம் 27 - 28
குமாரபுரம் - 29 - 30

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 06:17
TamilNet
HASH(0x56468e9da888)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 06:17